தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் டாப் லெவல் நடிகர் என நடிகர் விஜய்யை கூறலாம். அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறார். நடிகர் ரஜினிக்கு பிறகு அடுத்த இடத்தில் விஜய்தான் இருக்கிறார்.
வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து நடித்துவரும் படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது கடினமான விஷயமாகும். சிம்பு மாதிரியான நடிகர்கள் குறித்த நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் எவ்வளவு பிரச்சனைகள் கொடுத்துள்ளனர் என்பது பலரும் அறிந்ததே.
தமிழ் சினிமாவில் பெரும் நடிகரான நடிகர் திலகம் சிவாஜிக்கு ஒரு பழக்கம் இருந்தது. படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரமாக வரக்கூடியவர் நடிகர் சிவாஜி. எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிற்கும் இயக்குனருக்கு முன்பே சிவாஜி படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். இதனால் சிவாஜியை வைத்து படம் எடுக்கிறோம் என்றாலே இயக்குனர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார்கள்.
சிவாஜியின் பழக்கம்:
இதே போல பகவதி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பகவதி திரைப்படத்தை இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது காலையில் எத்தனை மணிக்கு படப்பிடிப்பிற்கு வர வேண்டும் என கேட்டுள்ளார் விஜய். அதற்கு இயக்குனர் நான் ஒரு 8.30 மணிக்கு வந்திடுவேன் சார். நீங்க ஒரு 9.30 கிட்ட வந்தா கரெக்டா இருக்கும் என கூறியுள்ளார்.
மறுநாள் இயக்குனர் வருவதற்கே தாமதமாகிவிட்டது. சரி விஜய்யை 9.30க்குதானே வர சொல்லி இருக்கிறோம் என அசால்ட்டாக வந்துள்ளார் இயக்குனர். அங்கு பார்த்தால் ஏற்கனவே விஜய் வந்து அமர்ந்துள்ளார். அப்போது அங்கு வந்த டெக்னீசியன். சார் காலை 8 மணிக்கே விஜய் வந்துவிட்டார் என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, சிவாஜிக்கு பிறகு விஜய்தான் அப்படி நேரத்தை சரியாக பின்பற்றினார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சான்ஸ் கிடைக்காமல் திணறிய செல்வராகவன்..! – அண்ணனுக்காக தயாரிப்பாளரிடம் கை ஏந்திய தனுஷ்…
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…