விஜயுடன் கௌதம் மேனன் இணைய ஒரே வழி....! முக்கி முக்கி பேசுவாரே தவிர இத பண்ணுவாரா இயக்குனர்...?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிள் வரும் தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
பொங்கல் அன்று படத்தை திரையில் பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் இணைய இருக்கிறார். அந்த கூட்டணியை திரும்பபும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி பல வியப்பூட்டும் சம்பவங்களை தான் ரசிகர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இதையும் படிங்கள் : கழட்டிவிட்ட சந்தானம்…தட்டி தூக்கும் யோகிபாபு…மனுஷன் பொழக்க தெரிஞ்சவருதான்!…
அந்த அளவுக்கு இளம் இயக்குனர்கள் இன்று புது புது யுக்திகளை கையாண்டு மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். குறிப்பாக லோகேஷ், நெல்சன், வெற்றிமாறன், கௌதம் மேனன் இப்படி ஏகப்பட்ட இயக்குனர்களின் படங்களை ரசிகர்களும் வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கௌதம் மேனனுடன் நடிகர் விஜய் எப்பொழுது இணைவார் என்ற கேள்வி எல்லார் மத்தியிலும் நிலவி வருகின்றது.
கமல்,சூர்யா, அஜித் உட்பட நடிகர்கள் இணைந்த இவருடன் விஜயும் இணைந்து படம் பண்ணவேண்டும் என ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதற்கு கௌதம் முழு கதையையும் விஜயிடம் சொல்லவேண்டும் இல்லையா முழு ஸ்கிரிப்ட் பண்டிலையாவது கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் விஜய் இவருடன் இணைவார் என்று திரைவட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தை எப்பவோ முடித்து விட்டேன் என சொன்ன கௌதம் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் அந்த படத்தின் கதை ஜெயம் மோகனிடம் எழுத சொல்லியிருக்கிறேன் என கூறியிருக்கிறார். அதனால் தான் விஜய்க்கு எதுமே முழுவதுமாக இருந்தால் தான் நடிக்க சம்மதிப்பார் என கூறப்படுகிறது.