விஜய் நடித்த ஐந்து படங்கள்:
இன்றைய சினிமாவில் வில்லன் எனும் கதாபாத்திரம் இல்லை என்றால் படத்திற்கு சுவாரசியம் என்று ஒன்று இல்லாமல் போய்விடும். ஆனால் விஜய் நடித்த ஐந்து படங்களில் வில்லன்களே இல்லாமல் மாபெரும் சூப்பர் ஹிட் திரைப்படமாக வலம் வந்த ஐந்து திரைப்படத்தைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்.
குஷி:
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி எனும் திரைப்படத்தை இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்கள் 2001 ஆம் ஆண்டு இந்த படம் முழுவதுமாக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். மேலும் காதலருக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய ஒரு திரைப்படமாகும். இந்த படத்தின் மூலமே நடிகர் விஜய்க்கு திரைத்துறையில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தன.
மேலும் நடிகை ஜோதிகா அவர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லன் எனும் கதாபாத்திரம் ஒன்று இல்லாமலேயே படத்தை சுவாரசியமாக எடுத்திருப்பார் இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்கள்.

பிரண்ட்ஸ்:
அடுத்ததாக விஜய் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை தேவயானி மற்றும் விஜயலட்சுமி போன்ற நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மூன்று நண்பர்களின் கதை அம்சம் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திலும் வில்லன்களே இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இருந்தாலும் இது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

காதலுக்கு மரியாதை:
அடுத்ததாக காதலுக்கு மரியாதை எனும் திரைப்படத்தில் விஜய் மற்றும் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் ஆன அஜித் அவர்களின் மனைவி ஷாலினி அவர்கள் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் முழுவதுமாக காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் கதை குடும்பத்திற்காக தங்களின் காதலயே தியாகம் செய்யும் இரு காதலர்கள் பற்றிய ஒரு திரைப்படமாகவும் இறுதியில் குடும்பங்கள் இணைந்து காதலுக்கு பச்சை கொடியே காட்டிய இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திலும் வில்லன்களே யாரும் இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.
இதையும் படிங்க- இப்படி லெக் பீஸ் காட்டினா பொழப்பு ஓடாது செல்லம்!.. குட்டகவுனில் சூடேத்தும் விஜே பார்வதி…

துள்ளாத மனமும் துள்ளும்:
அடுத்ததாக விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம்.இந்த திரைப்படமும் காதலை மையப்படுத்திய எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக விஜயின் கேரியரில் அமைந்தது. இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் நடிகை சிம்ரன் அவர்கள் ஆரம்பத்தில் விஜயை தவறாக புரிந்து கொள்வார் பிறகு கண் பார்வை இழந்து குட்டி எனும் இந்த விஜய்யை காதல் செய்வார். ஆனால் கண் பார்வை கிடைத்த பிறகு தான் தெரிந்தது ஆரம்பத்தில் தான் வெறுத்த விஜய் தான் குட்டி என்பதை உணர்ந்து இருவரும் ஒன்று சேர்வார்கள். இந்த படத்தில் வில்லன்களே இல்லாத நிலையிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

பூவே உனக்காக:
அடுத்ததாக பூவே உனக்காக திரைப்படம் இந்தப் படத்தில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா அவர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் தனது காதலியை கரம்பிடிப்பதற்காக காதலியின் வீட்டில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். காமெடி கலந்த இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது இந்த படத்திலும் வில்லன்களே இல்லாத நிலையில் மாபெரும் மெகா ஹிட் திரைப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க- இப்படி லெக் பீஸ் காட்டினா பொழப்பு ஓடாது செல்லம்!.. குட்டகவுனில் சூடேத்தும் விஜே பார்வதி…
