Categories: Cinema News Entertainment News latest news

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? விஜய் முன்னாடி கெத்தா பேசிய மாணவி – சிலிர்த்த தளபதி (வீடியோ)

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் விரைவில் அரசியலில் இறங்கவுள்ளார். இதற்காக கொஞ்சம் கொஞ்சமாக அடித்தளமிட்டு வந்த அவர் முதல் வேலையாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ , மாணவிகளை கௌரவிக்கும் வகையில் விருது விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழா சுமார் ரூ 2 கோடி செலவில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர செயின் கொடுத்து பாராட்டினார்.

அப்போது ஒரு மாணவி விஜய்யை குறித்து பேசியபோது, உங்களது நிறைய படங்களை நான் பார்ப்பேன். சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதையும் தாண்டி வெளிவந்த அந்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்துவிடும்.

உங்களுக்கு தொந்தரவு கொடுத்தவர்களுக்கு நீங்கள் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என தன் வெற்றியின் மூலம் பதில் அளிப்பீர்கள் என கூறினார். அதை கேட்டு சிலிர்த்துப்போன விஜய் மீண்டும் ஒரு முறை கூறுமா என கண்ணை காட்ட அந்த மாணவி ” நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ” என்ற பாரதியார் வசனத்தை கெத்தா பேசினார். அதற்கு அரங்கமே கைதட்டியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
பிரஜன்