கடும் அப்செட்டில் விஜய்! பூஜை போடுறதுக்கு முன்னாடியே தளபதி 69ல் நடந்த அக்கப்போரு

by Rohini |
vijay
X

vijay

Thalapathy 69: விஜய் தற்போது கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்வதை விட ஜாலியோ ஜிம்கானா செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் நேற்று கோட் பட செட்டில் இருந்து வெளியான விஜயின் வீடியோ ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கிக் ஸ்கூட்டரில் அவர் ரைடு போன வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விண்டேஜ் நடிகர்கள் எல்லாம் சேர்ந்து இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். அதனால் எந்த மாதிரியான கதையாக இருக்கும்? வெங்கட் பிரபு படத்தை ஜாலியாக கொண்டு போயிருப்பாரா? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இதையும் படிங்க: மேடையில் அந்த தயாரிப்பாளரை போட்டுவிட்ட ரஜினிகாந்த்.. ஆனால் கவலைப்படாமல் சிரித்த பிரபலம்!

இந்த நிலையில் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அதற்குள் அவர் ஒப்புக் கொண்ட படங்களை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காகவே தளபதி 69 படத்திற்கான இயக்குனர் தேர்வு அதிரிபுதிரியாக நடந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. கடைசியாக எச்.வினோத் பெயர்தான் அடிப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தளபதி 69 படத்தை தானையா என்பவர்தான் தயாரிக்க இருந்தாராம். ஆனால் எந்தவொரு அக்ரிமெண்டும் போடாத நிலையில் தளபதி 69 படத்தை நான் தான் தயாரிக்க போகிறேன் என்று சொல்லி படத்தை சாட்டிலைட் உரிமை என ஒரு சில உரிமைகளுக்காக பேரம் பெசியதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய் கடும் அப்செட்டாகி விட்டாராம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்தே ஆசையாக கேட்ட ஓவியம்… இனிமே வாழ்க்கை மாறிடும் என சிலாகித்த தருணம்…

படத்தின் பூஜையே போடவில்லை. அக்ரிமெண்டும் போடவில்லை. அதற்குள் இப்படி செய்கிறாரே என்று எண்ணி நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என சொல்லி தானையாவை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம் விஜய்.

Next Story