பிரபல நடிகரின் வாரிசை நூலிழையில் காப்பாற்றிய விஜய்!.. மருத்துவர்களால் கூட முடியாததை செய்து காட்டிய தளபதி!..

by Rohini |   ( Updated:2023-04-03 10:08:16  )
vijay
X

vijay

விஜய் என்றாலே வெற்றி என்று அவரின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி கூறுவது வழக்கம். அதை போலவே அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்றுதான் விஜயின் சினிமா கெரியரும் அமைந்து வருகிறது.
கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகவே இருந்து வருகிறார்,

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பல கோடி வசூலை பார்த்து விடுகிறார் விஜய். அதைப் போலவே லியோ படத்திற்கும் டேபிள் பிராஃபிட் பல கோடிகளை தாண்டி வசூலாகியிருக்கிறது. அடுத்தப் படத்திற்கான பிஸினஸும் ஆரம்பமாகிவிட்டது. சினிமா கெரியரில் விஜயின் வளர்ச்சி ஒருபக்கம் இப்படி இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அவர் என்ன மாதிரியான உதவிகளை செய்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக இருக்கிறது.

சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு அவரால் ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா? என்று ரசிகர்கள் இணையத்தில் பல கேள்விகளை சமீபத்தில் எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். அதாவது நடிகர் நாசருக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறாராம் விஜய்.

விஸ்வரூபம் படப்பிடிப்பு சமயத்தில் நாசர் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் நாசரின் மகனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. விஷயம் அறிந்த நாசர் பதறிப் போய் தன் மகனை பார்க்க சென்றிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் படு காயங்களுடன் தன் மகன் அப்படி இருப்பதை பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார்.

சிகிச்சைகள் எல்லாம் முடிந்தும் அவரின் மகன் கோமா நிலைக்கு செல்லும் கட்டாயத்தில் இருந்தாராம். அப்போது அங்கு உள்ள மருத்துவர்கள் அவருடன் கொஞ்சம் பேசிக் கொண்டே இருங்கள், ஏதாவது அவருக்கு பிடித்ததை பற்றி பேசிக் கொண்டே இருங்கள், அப்போது தான் கோமா நிலைக்கு போவதை தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இவர்களும் அதை போலவே செய்திருக்கின்றனர். அப்போது அவரது மகன் வாயில் ஏதோ முணு முணுத்துக் கொண்டே இருந்தாராம். சற்று உற்று நோக்கினால் விஜய் என்ற பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தாராம். உடனே நாசர் மற்றும் குடும்பத்தார் அவரின் நெருங்கிய நண்பர் விஜயை வரவழைத்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் விஜய் என்ற வார்த்தையை அவரின் மகன் சொல்வதை நிறுத்தவில்லையாம்.

அதன் பிறகு தான் அவரது நண்பர்கள் நாசரிடம் ஒரு வேளை நடிகர் விஜயை சொல்கிறானோ என்று கேட்டிருக்கிறார்கள்.ஏனெனில் நாசரின் மகன் விஜயின் தீவிர வெறியனாம். அதன் பிறகு வெளியூர் படப்பிடிப்பில் இருந்த விஜயிடம் தகவலை சொல்லி விஜய் ஒரு வீடியோ அனுப்பியிருக்கிறார். அதை பார்த்த பின்னரே அவரின் மகன் சாதாரணமாக இருந்தாராம். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக குணமாவதற்கும் காரணமாக இருந்ததாம். பின்னர் நாசர் மகனின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் விஜய் உள்ளூரில் இருந்தால் கேக் வாங்கி கொண்டு வந்து கொண்டாடி விட்டு செல்வாராம். இதை செய்யாறு பாலு கூறினார்.

Next Story