More
Categories: Cinema News latest news

விஜயகாந்த் குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! தளபதினா சும்மாவா?

Vijay Vijaykanth: கோலிவுட்டில் விஜயின் வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த இடத்தை அவர் அடைவதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ரசிகர்களாகிய விஜய் ரசிகர்களுக்கு தெரியும். அதே வேளையில் எப்படியாவது ஒரு முன்னணி நடிகராக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பல போராட்டங்களை கடந்து வந்தார்.

அதில் ஒன்று விஜய் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தது தான். அந்த படத்திற்கு பிறகு தான் விஜயின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. அந்த நேரத்தில் விஜயகாந்த் மிகவும் ஒரு உச்சத்தில் இருந்த நடிகர். அவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தனர் .அவரை இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தால் அது விஜயின் கெரியருக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என எண்ணியே எஸ் ஏ சந்திரசேகர் இதை நடத்திக் காட்டினார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!

ஆனால் அதன் பிறகு விஜய்க்கும் விஜயகாந்துக்கும் என்ன மாதிரியான ஒரு உறவு இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அது பல விமர்சனங்கள் உருவாக காரணமாக அமைந்தது. விஜயகாந்தை ஒரு முறை கூட விஜய் பார்க்கவில்லை. அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கூட அவருக்கு ஆறுதல் கூற விஜய் செல்லவில்லை.

இதுதான் விஜயகாந்துக்கு விஜய் செய்யும் நன்றி கடனா? என்றெல்லாம் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் விஜயின் மகன் சண்முக பாண்டியனின் சினிமா கெரியருக்கும் விஜய் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யலாமே என்றெல்லாம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் இப்போது ஒரு காரியத்தை செய்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: விஜயகாந்தை பற்றி கமல் எப்போதும் சொல்லும் ஒரு வார்த்தை! போட்டி நடிகர்களையே பிரமிக்க வைத்த கேப்டன்

அதாவது சண்முக பாண்டி நடிக்கும் படைத்தலைவன் படம் கூடிய சீக்கிரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அந்த படத்தை பற்றி  டீஸரை விஜயின் சமூக வலைதள அக்கவுண்டில் போட்டு விளம்பரம் செய்தால் நன்றாக இருக்கும் என விஜயகாந்தின் குடும்பம் கேட்டு இருக்கிறது. அதற்கு விஜய் இதற்கு என்ன இதைவிட அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் நேரடியாக வந்து விடுகிறேன் எனக் கூறியிருக்கிறாராம். இதைக் கேட்டதும் விஜயகாந்த் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

Published by
Rohini

Recent Posts