அட்லீக்கு அடித்த டபுள் டமாக்கா ஆஃபர்!.. புள்ள பொறக்குற நேரம் விஜயால் அடித்த யோகம்!..

vijay
விஜய் அட்லீ என்று சொன்னாலே ரசிகர்கள் மத்தியில் ஏதோ வித ஒரு குதூகலம் தான். காரணம் இவர்கள் இணைந்து தொடர்ந்து கொடுத்த ஹாட்ரிக் வெற்றி தான். மேலும் விஜய் அட்லீயை தன் தம்பியாகவும் அட்லீ விஜயை தன் அண்ணனாகவும் தான் பாவித்து வருகிறார்கள்.

vijay
தெறி, பிகில், மெர்சல் என்ற தொடர்ச்சியான மூன்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து விஜய் என்றாலே அது அட்லீ தான் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் பதிந்து விட்டது.இதன் எதிரொலியை பீஸ்ட் படத்தின் தோல்வியிலேயே பார்த்திருப்போம்.
இதையும் படிங்க : அவரு கோகுலத்தில் இருக்க வேண்டிய கண்ணன்!.. கார்த்திக் ஹீரோ என்றதும் பதறிய இயக்குனர்!..
இந்த நிலையில் அட்லீ மற்றும் அவரது மனைவி வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. கோலாகலமாக நடந்த அந்த விழாவில் திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். முக்கியமாக நடிகர் விஜயும் வந்திருந்து அட்லீயையும் பிரியா அட்லீயையும் வாழ்த்தினார்.

vijay atlee
வாழ்த்தியதோடு மட்டுமில்லாமல் சஸ்பென்ஸாக ஒரு கிஃப்டும் பரிசளித்தார். அந்த கிஃப்ட் என்னவென்றால் ஒரு அழகான ஓவியம். அந்த ஓவியம் ஏற்கெனவே அட்லீ மற்றும் அவரது மனைவியோடு எடுத்த புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக கருதப்பட்ட ஒரு புகைப்படத்தை ஓவியமாக வரைய சொல்லி அதை பரிசாக கொடுத்திருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க : ரஜினி வீட்டில் அமர்ந்து தர்ணா பண்ணிய விஜயகாந்த்… அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…
இன்னும் கூடுதல் தகவல் என்னவெனில் விஜயின் 68வது படத்தை இயக்கும் வேலையை அட்லீக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். அது சம்பந்தமான கையெழுத்து சமீபத்தில் தான் நடந்தேறியிருக்கிறதாம். அதை தயாரிக்க போவது சன்பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்றும் உறுதிபட தெரிகிறது.

vijay atlee
சன்பிக்சர்ஸ் நிறுவனம், அட்லீ, விஜயின் மேனேஜர் மூவரும் சேர்ந்து தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனராம். ஆனால் ஏற்கெனவே விஜய் இந்த வாய்ப்பை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தான் கொடுத்திருக்கிறார். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை பார்த்து மிரண்டு போய் விட்டதாம்.
ஆம் . தளபதி - 68 படத்திற்கான மொத்த பட்ஜெட் 400 கோடியாம். அதில் அட்லீக்கு மட்டுமே 50 கோடி சம்பளமாம். மேலும் விஜய்க்கு 150 கோடி வரை சம்பளம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம். ஆக மொத்தம் அட்லீக்கு விஜயால் ஒரு பக்கம் சர்ப்ரைஸான கிஃப்ட் மற்றும் படத்தை இயக்கும் வாய்ப்பு என குதூகலத்தில் இருக்கிறார் அட்லீ.