அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..
மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், கேப்டன்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்ன்னா ஒருத்தர் தான், தலன்னா ஒருத்தர் தான் என அனைத்து நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் பேசிய நடிகர் விஜய் அப்பா சட்டைக்கும்.. அப்பா சேருக்கும் அவரையே பார்த்து வளரும் பையன் ஆசைப்படுறதுல்ல என்னங்க தப்பு என அடுத்த சூப்பர்ஸ்டார் பதவிக்கு தான் ஆசைப்படுவதையும் அப்பட்டமாக சொல்லி விட்டார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான நடிகர் விஜய் அப்பா சேருக்கு ஆசைப்பட்டு இயக்குநராக மாறவில்லை. அதற்கு பதிலாக சிறு வயதில் இருந்தே நடிகர் ரஜினிகாந்த் போலவே படங்களில் நடித்து வந்து அவருடைய மேனரிஸத்தை லியோ படம் வரையில் வைத்துக் கொண்டு நடித்து வரும் விஜய் நடிகர் ரஜினிகாந்தை அப்பா ஸ்தானத்தில் வைத்து பேசியது ரஜினி ரசிகர்களையே தலைவரின் மகனையா இப்படி அசிங்கமா பேசிட்டோம் என நினைக்க வைத்திருக்கும்.
இதையும் படிங்க: கைய குடுங்க சகல!.. ரஜினியை மேடையில் கலாய்த்த ரத்னகுமார்.. ப்ளூ சட்டை மாறன் போட்ட போஸ்ட்டை பாருங்க!
சமீபத்தில், தலைவர் 170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் அணிந்திருந்த அதே கலர் சட்டையை அணிந்து கொண்டு தான் லியோ சக்சஸ் மீட்டுக்கே விஜய் வந்திருந்ததையும் ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்ய எடுத்து போடுவாங்கன்னு புரிந்து கொண்டு இப்படியொரு டயலாக் பேசி அதற்கும் வேட்டு வைத்து விட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கு மேலாவது விஜய் சொன்ன பேச்சை கேட்டு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை கொப்பளிக்காமல் இருப்பார்களா? என்ன அவன் கெடக்குறான்னு மார்க் ஆண்டனி ஸ்டைலில் மீண்டும் ரஜினிகாந்தை பற்றிய ட்ரோல்களை நேற்று இரவு முதல் அதிகமாக போட்டுத் தாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: லியோ வெற்றி விழாவில் ரஜினிகாந்தை வம்பிழுத்த ரத்னகுமார்!.. தலைவர் 171 பக்கம் தலைவைக்க முடியாதே!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms