More
Categories: Cinema News latest news

கோட் திரைப்படத்தில் விஜயிற்கு வில்லனாகும் ’சூப்பர்ஸ்டார்’… கோட் படத்தின் ஆச்சரிய அப்டேட்கள்

Goat Movie: விஜயின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்கள் ரிலீசாகி இருக்கிறது இதில் ஒரு சில அப்டேட்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு செம ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் திரைப்படம் டிகிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் இப்படத்தை கோட் எனச் செல்ல பெயர் வைத்திருக்கின்றனர்.   இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் சினேகா, லைலா,  பிரசாந்த்,  பிரபுதேவா,  மைக் மோகன்,  எஸ் ஜே சூர்யா  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்தும் வருகின்றனர்.

இதையும் படிங்க: டிடியால் கதறி அழும் சகோதரி! கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே – ஐயோ இப்படி ஆகிப் போச்சே

இப்படத்தில் விஜய் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். கிட்டத்தட்ட இப்படம் ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ஜெமினி மேன் திரைப்படத்தின் சாயலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.  பரபரப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் விஜயின் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேட் கதாபாத்திரம் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. அதாவது டிஏஜிங் முறையில் உருவாக்கப்படும் இளம் வயது விஜய் தான் நெகட்டிவ் ஷேட்டில் இருக்கலாம். அதன் பின்னரே வயதான விஜயுடன் அவர் இணைந்து வில்லன்களை துவம்சம் செய்யும் கதையாக கூட அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த வகையில் கதை அமைக்கப்பட்டு வந்தால் அது ஜெமினிமேன் திரைப்படத்தின் காப்பியாகவே கருதப்படும். இந்த பிரச்னையை வெங்கட் பிரபு எப்படி கையாள்வார் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முழுமையாக நெகட்டிவ் ஷேட்டில் வராமல் விஜய் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அந்த கதாபாத்திரத்தில் இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: தனக்கு வாழ்க்கை கொடுத்த பிரபல இயக்குனரை அசிங்கப்படுத்திய அஜித்… ஆனா இப்படிலாமா பேசுவீங்க?

Published by
Akhilan

Recent Posts