மங்காத்தாவ விட ஆயிரம் மடங்கு!.. கோட் படத்தை கொண்டாடும் ஃபேன்ஸ்!.. டிவிட்டர் விமர்சனம்...
Goat Review: விஜயின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் கோட் படத்தை தமிழ்நாட்டில் சில தியேட்டர்களிலும், கேரளாவிலும் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்த ஆவலுடன் பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் என்ன சொல்லி இருக்கிறார்கள் என பார்ப்போம்.
படம் சிறப்பாக இருக்கிறது. படத்தில் விஜய் ஏற்கனவே நடித்துள்ள பல படங்கள் தொடர்பான காட்சிகளும் வருகிறது. எனவே, ஒரே படத்தில் பல விஜய் படங்களை பார்த்த உணர்வு வருகிறது. படம் வேறலெவலில் இருக்கிறது. 3 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஆக்சன் காட்சிகள் தரமாக இருக்கிறது என சிலர் சொல்கிறார்கள்.
அதேபோல், வெங்கட்பிரபு இப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். தளபதி கலக்கிவிட்டார். 2026ல் அவர்தான் சி.எம். எல்லா காட்சிகளுமே நன்றாக இருந்தாலும் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தாவை விட இது ஆயிரம் மடங்கு என சிலர் சொல்கிறார்கள்.
படம் தரமா இருக்கு. கில்லி, கத்தி, போக்கிரி, துப்பாக்கி, வேலாயுதம் என விஜய் நடித்த படங்களின் ரெப்ரன்ஸ் இதில் இருக்கிறது. விஜயகாந்த் வரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. படத்தில் 3 விஜய். விஜய் ஸ்டைலாக இருக்கிறார். படம் மாஸாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் விஜய் சூப்பராக நடித்திருக்கிறார் என விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் எவ்வளவு பிடித்திருக்கிறது என்பது தெரியவில்லை. அதுபற்றிய அப்டேட்டுகள் இனிமேல்தான் வரும் என எதிர்பார்க்கலாம்.