
Cinema News
பீஸ்ட் படப்பிடிப்பு ஓவர்… லண்டன் பறக்கும் விஜய்….எதற்கு தெரியுமா?….
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டது. விஜயை நெல்சன் கட்டிப்பிடித்து வழியனுப்பிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. தற்போது வேறு சில காட்சிகளை நெல்சன் படமாக்கி வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.
ஒவ்வொரு படம் முடியும் போதும் விஜய் லண்டனில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு செல்வார். தற்போது பீஸ்ட் படத்தில் அவரின் காட்சிகள் முடிந்துவிட்டது. மேலும், இந்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் 22ம் தேதி குடும்பத்துடன் அவர் லண்டன் புறப்பட்டு செல்கிறாராம். பொங்கல் முடிந்த பின்னரே அவர் சென்னை திரும்பவுள்ளாராம்.
அதோடு, கேரள சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம். அது லண்டன் செல்வதற்கு முன்பா அல்லது லண்டலினிலிருந்து சென்னை திரும்பிய பின்பா என்பது மட்டும் தெரியவில்லை.
அதன்பின் அவர் நடிக்கும் 66வது படமான தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார்.