விஜய் போட்ட டீலிங்கில் கதிகலங்கிய ஏஜிஎஸ் நிறுவனம் - ‘தளபதி 68’ல் நடந்த குதிரை பேரம்

by Rohini |
vijay
X

vijay

விஜயின் படங்கள் என்றால் பிசினஸிற்கு பஞ்சமிருக்காது. படங்கள் வெளியாவதற்கு முன்பே கோடிக்கணக்கில் அதற்கான வியாபாரமும் நடந்து முடிந்து விடுகிறது. உதாரணமாக லியோ படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 434 கோடி வரைக்கும் முடிந்ததாக கூறப்படுகிறது. ரிலீஸான பிறகு இன்னும் அதன் வசூல் அதிகமாகும்.

லியோ படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் 125 கோடி. அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க : வில்லனாக அறிமுகமாகி ஹீரோ ஆன நடிகர்கள்!.. ஹீரோவாக ஜெயிக்க முடியாமல் போன ஆனந்தராஜ்!..

தளபதி 68 படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதால் ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் அவருக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் மாதவனும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இந்த நிலையில் தளபதி 68 படத்திற்காக விஜய் முன்பு வாங்கிய சம்பளத்தை விட இந்தப் படத்தில் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது. அதாவது 200 கோடி விஜயின் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.

அதெப்படி இது சாத்தியமாகும் என்று விசாரித்ததில் அந்தப் படத்தில் ஒப்பந்தமாகும் போதே விஜய் ஒரு சில டீலிங் பேசினாராம்.அதாவது தளபதி 68 படத்திற்காக தனக்கு 100 கோடி சம்பளமும் வருகிற லாபத்தில் பாதியும் கொடுத்து விடும்படி கேட்டாராம்.

இதையும் படிங்க : அங்க இங்கனு கடைசியா சூர்யாவுக்கே செக் வைத்த விஜய்! ‘வாடிவாசல்’ வந்த வாசல் வழியாவே போயிடும் போல!

ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் கிட்டத்தட்ட தளபதி 68 படத்திற்கான வியாபாரம் 300 கோடி வரை வரும் என்றும் அதில் பாதியை விஜய்க்கு கொடுத்தால் 150 கோடி மற்றும் அவரின் சம்பளம் 100 கோடி ஆக மொத்தம் 250 கோடி வரை சம்பளமாக கொடுக்க வேண்டி வரும் என்று யோசிக்க ,

ஒரே பேரமாக விஜயின் சம்பளமாக 200 கோடி என சொல்லி முடிவு எடுத்திருக்கிறார்கள். இப்படித்தான் விஜயின் சம்பளம் இந்தளவுக்கு எகிறியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Next Story