முதலிடத்தில் விஜய்.. ஏழாவது இடத்தில் ரஜினி...எதில் தெரியுமா?...

by சிவா |
vijay
X

நடிக்க வந்த புதிதில் காதல் படங்களில் நடித்தார் விஜய், பின் மெல்ல மெல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி சூப்பர் ஹீரோவாகவும் மாறினார்.தற்போது தளபதி விஜயாக மாறி 100 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் மாறியுள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை கடந்து விட்டது.

விஜய்க்கு டிவிட்டரில் கணக்கு இருக்கிறது. அதில், தான் நடிக்கும் புதிய படங்களின் முக்கிய அப்பேட்டுகளை மட்டுமே அவர் பதிவிட்டு வருகிறார். ஆனாலும், டிவிட்டரில் அவர் பகிரும் அப்டேட்கள் பல லட்சம் லைக்ஸ்களை பெறுகிறது.

இந்நிலையில், 2021ம் வருடத்தில் டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்களில் நடிகர் விஜய் முதலித்தை பிடித்துள்ளார். 4வது இடத்தில் சூர்யாவும், 7வது இடத்தில் ரஜினிகாந்த்தும், 9வது இடத்தில் தனுஷும், 10வது இடத்தில் அஜித்குமாரும் உள்ளனர்.

இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story