Jananayagan: படத்துக்கு பிரச்சனை வரும்!.. தயாரிப்பாளரிடம் அப்போதே சொன்ன விஜய்!..

Published on: January 8, 2026
vijay
---Advertisement---

ஜனவரி 9ம் தேதியான நாளை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த விஜயின் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.சென்சார் துறையை சேர்ந்த ஒருவரே புகார் கொடுத்ததாகவும் அதனால் மறுத்தணிக்கைக்காக அதிகாரி அனுப்பியதாகவும் சென்சார் தரப்பில் என்னென்னவோ சொல்கிறார்கள். சரியான விளக்கத்தை அவர்கள் கொடுக்காததால் திரை விஜய் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

விஜயின் திரைப்படம் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை சந்திப்பது என்பது இப்போது துவங்கியதில்லை. பல வருடங்களாகவே இது போன்ற பிரச்சினைகளை விஜய் சந்தித்து வருகிறார். அவரின் தலைவா படத்தை இரண்டு நாள் நிறுத்தினார்கள். வேறு சில படங்களுக்கும் இதுபோல பிரச்சனை வந்தது. தற்போது ஜனநாயகனுக்கும் இந்த பிரச்சனை வந்திருக்கிறது.

Also Read

இந்நிலையில்தான், இந்த படத்திற்கு பிரச்சனை வரும் என விஜய் முன்பே கணித்தது தெரியவந்திருக்கிறது. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியபோது ‘சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும்.. இதுல நான் வேற அரசியலுக்கு போறேன்.. எப்படி சார் இந்த நேரத்துல படத்தை எடுத்து பண்றீங்களா? பரவாயில்லையா? என தயாரிப்பாளரிடம் கேட்டேன்.. அதுக்கு யோசிக்காமல் தயாரிப்பாளர் ‘படம் பண்ணலாம்’னு சொல்லிட்டார். என சொல்லியிருந்தாஅர். விஜய் பேசிய அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிரச்சனை வரும்.. அரசியலுக்கும் சென்று விட்டதால் கண்டிப்பாக பல வகைகளும் பிரச்சனை வரும் என்று விஜய் அப்போதே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.