Vijay: தங்கச்சி மாதிரி சார்.. எப்படி ரொமான்ஸ் வரும்? விஜயின் அந்த படம் ஓடாததற்கு இதுதான் காரணமா?

vijay (2)
Vijay: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் விஜய். இவருடைய படங்கள் சமீபகாலமாக பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்து வருகிறது. விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூலில் சாதனையை படைத்து வருகிறது. அப்படி ஒரு ஓப்பனிங் விஜய் படங்களுக்கு இதுவரை இருந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் விஜய் ஒரேடியாக அரசியலுக்கு போவது பெரும்பாலான வினியோகஸ்தர்கள் விரும்பவில்லை.
அவர் அரசியலுக்கு போனாலும் வருடத்திற்கு ஒரு படம் என்ற வீதத்தில் நடிக்கலாம் என்றும் விரும்புகின்றனர். ஆனால் விஜய் ஒரே குறிக்கோளாக அரசியல் தான் இனி தன்னுடைய களம் என்று இருக்கிறார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதுதான் அவருடைய கடைசி படமாகவும் இருக்க போகிறது. இந்தப் படத்திற்கு பிறகு முழு மூச்சாக அரசியலில்தான் கவனம் செலுத்த போகிறார்.
இந்த நிலையில் விஜய்க்கு பெரும் சவாலாக இருந்த படம் சுறா. அதுவும் அவருடைய ஐம்பதாவது படமாக அமைந்தது. யாரும் எதிர்பார்க்காத ஒரு தோல்வியை தழுவியது. அந்தப் படத்தை பற்றி இப்போது வரை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள். ஏன் தமன்னா கூட பல பேட்டிகளில் சுறா படத்தில் தான் நடித்ததுதான் பெரும் தவறு என்று கூறியிருந்தார். ஏனெனில் சுறா படத்தில் தமன்னாவுக்கு சரியான ஸ்கோப் இல்லை என்பதுதான் உண்மை.
ஆனால் இந்தப் படத்தை பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத ஒரு தகவலை பிரபல நடிகரும் தொழிலதிபருமான ஆர் கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். எல்லாம் அவன் செயல் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆர் கே. இவருக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கமும் இருந்து வருகிறது. சுறா படத்தில் நடிக்கும் போது தமன்னாவை பார்க்கும் போதெல்லாம் விஜய்க்கு தன் தங்கை நியாபகம்தான் வந்ததாம்.

அதை படப்பிடிப்பில் இருக்கும் சில பேரிடம் விஜயே கூறியிருக்கிறாராம். அவரை பார்க்கும் போது என் தங்கச்சி நியாபகம் தான் வருகிறது. அதனால் தமன்னாவுடன் என்னால் நெருங்கி நடிக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாராம் விஜய். இதை ஒரு பேட்டியில் ஆர் கே கூறினார்.