விஜய் தலையில் முடி இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!
கோலிவுட்டின் தளபதியாக திகழும் விஜய்க்கு தற்போது 48 வயது ஆகிறது. எனினும் கல்லூரி செல்லும் இளைஞனைப் போலவே தனது உடலை மெயின்டெயின் செய்து வருகிறார். குறிப்பாக விஜய்யின் அசத்தலான நடனம் இப்போதும் சூறாவளிப் போலவே இருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் துருதுருவென வலம் வருகிறார்.
ஆனால் சமீப காலமாக விஜய்க்கு முடி இல்லை எனவும் அவர் தலையில் தோப்பா வைத்திருக்கிறார் எனவும் பல செய்திகள் வலம் வருகின்றன. “லியோ” திரைப்படத்தில் கூட விஜய் தோப்பா வைத்துத்தான் நடிக்கிறார் என இணையத்தில் அஜித் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இது குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
“விஜய்க்கு தலை மயிர் உதிர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட மொட்டையாகிவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக விஜய் தோப்பா வைத்துக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்றால், பல நடிகர் நடிகைகள் ரசாயனம் கலந்த கெமிக்கல் ஷாம்ப்புக்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துவதால் இயல்பாக இருக்கும் முடிகள் வேரோடு வந்துவிடுகிறது. இது போல் ஷாம்ப்பு போட்டதனால்தான் தலை மயிர் உதிர்ந்துவிட்டது என்று ரஜினிகாந்தே ஒரு முறை கூறியுள்ளார்” என்று பேசிய அவர் “விஜய் ஒரே மாதிரியான தோப்பாவை பயன்படுத்துவது இல்லை. வெவ்வேறு தோப்பாக்களை பயன்படுத்துக்கிறார். ஆதலால் அவரின் தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் எரிச்சல் அடைகிறார்கள்” எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அஜித் ரசிகர்கள் இணையத்தில் விஜய் தோப்பா முடி வைத்திருக்கிறார் என கேலி செய்து வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசியது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.