ஜோதிகாவை ஜோடியாக்க விஜய் போடும் திட்டம்! லண்டனில் நடக்கும் ரகசிய சந்திப்பு

by Rohini |
jo
X

jo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது விஜய் லியோ படத்தில் நடித்து முடித்து விடுமுறைக்காக லண்டன் சென்று இருக்கிறார். 12 நாள் சுற்றுப்பயணமாக லண்டனில் இருக்கப் போகும் விஜய் அந்த சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவுடன் தன்னுடைய 68 வது படத்தில் இணைய இருக்கிறார். அவர் லண்டன் செல்ல விமான நிலையத்திற்கு சென்ற போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் மிகவும் வைரலானது.

jo1

vijay

அதே சமயம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய அஜித்தின் வீடியோவும் வைரலானது. விஜய் லண்டன் சென்றிருப்பது விடுமுறை பயணமாக இருந்தாலும் அதே வேலையில் சூர்யாவும் தன்னுடைய குடும்பத்துடன் விடுமுறைக்காக லண்டன் சென்று இருக்கிறாராம். சமீபத்தில் தான் சூர்யா கங்குவா திரைப்பட த்தின் படப்பிடிப்பை கொடைக்கானலில் முடித்துவிட்டு ஓய்வில் இருந்திருக்கிறார்.

கங்குவா திரைப்படத்தின் அடுத்த ஷெடுலுக்கான செட் போடும் வேலை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறதாம். அதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகுமாம். அந்த இடைப்பட்ட காலத்தில் ஜோதிகாவை அழைத்துக் கொண்டு சூர்யா லண்டன் சென்றிருக்கிறாராம்.

jo2

jo2

ஒரே நேரத்தில் விஜயும் லண்டனில் இருக்க சூர்யா ஜோதிகாவும் லண்டனில் இருக்க ஏற்கனவே விஜய்யின் 68வது படத்திற்கு அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தி வைரலானது. ஒரு வேளை இதைப்பற்றி ஆலோசனை செய்வதற்காகத்தான் லண்டன் சென்றிருக்கிறார்களோ என ரசிகர்களும் சரி கோடம்பாக்கத்தில் சிலரும் சரி பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க : டைரி மூலம் அர்ஜூனுக்கு கிடைத்த வாய்ப்பு!.. வாழ்க்கையையே மாத்தின சூப்பர் ஹிட் படம்!..

இதை மட்டுமே பற்றி பேச அவர்கள் லண்டன் சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் லண்டனில் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு, வேண்டும் என்றால் சூர்யாவும் விஜய்யும் ஜோதிகாவும் லண்டனில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வலைப்பேச்சு பிஸ்மி கூறினார்.

Next Story