ஒரு பக்கம் ஜெயிலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் லியோ படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் இடையில் ஒரு பனிப்போர் நிகழ்ந்து கொண்டே வருகின்றது. நீ சூப்பர் ஸ்டாரா நான் சூப்பர் ஸ்டாரா என்ற விவாதம் ரசிகர்கள் மூலமாகவும் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினியின் அந்த ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் பேசு பொருளாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெய்லர் படம் வெளியாகி ஐந்து நாட்களில் 350 கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. பிரபலங்களின் கணிப்புப்படி ஆயிரம் கோடி வசூலை பெற்றாலும் அதில் சந்தேகம் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : வசூலில் தெறிக்கவிடும் சூப்பர்ஸ்டார்!.. கோடிகளை குவிக்கும் ஜெயிலர்.. 6 நாள் வசூல் இதுதான்!…
இந்த சாதனையை லியோ படம் முறியடிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் பிரபலங்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று லியோ படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் லியோ பக்கம் ஈர்த்து இருக்கிறது. அர்ஜுன் லியோ படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
40 நாட்கள் கால் சீட் கொடுத்த அர்ஜுன் 20 நாட்களில் தன்னுடைய படப்பிடிப்பை விரைவாக முடித்துக் கொண்டாராம் இதிலிருந்து இந்த லியோ படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரம் மிகப்பெரிய ஒரு ஹைப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இன்னும் படம் வெளியாக 60 நாட்கள் உள்ள நிலையில் எத்தனையோ அப்டேட்டுகள் வர காத்துக் கொண்டிருக்கின்றன.
படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களின் பிறந்த நாள்களும் வர இருக்கின்றன. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒவ்வொரு அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை கூஸ் பம்பில் வைக்க காத்திருக்கிறார் லோகேஷ். படப்பிடிப்பு முடிந்து விட்டது என்ற நிலையிலும் இன்னும் காளிதாஸ் ஜெயராமை வைத்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் லோகேஷ்.
இதையும் படிங்க : இன்னொரு பழம் எங்க… கவுண்டமணியை அலறவிட்ட கரகாட்டக்காரன் காமெடிக்கு விடை கொடுத்த செந்தில்…
இதையெல்லாம் தாண்டி விஜயின் அர்ப்பணிப்பு இந்தப் படத்தில் 200 சதவீதத்தையும் தாண்டி இருக்கிறது என சொல்லப்படுகிறது. நிலாவே வா என்ற படத்திற்காக ஆறு நாட்கள் நாகர்கோயிலில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்த விஜய் ஹோம் சிக் காரணமாக கொஞ்சம் பிரேக் எடுத்து சென்னை வந்து விட்டாராம்.
அப்படி இருந்த விஜய் லியோ படத்திற்கு 60 நாட்கள் முழுவதுமாக காஷ்மீரில் தங்கி இருந்தார். இதை பார்க்கும் போது இந்த படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முழுமூச்சுடன் நடித்திருக்கிறார் விஜய் என்று கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…