More
Categories: Cinema News latest news

என்னங்கடா மறந்துட்டீங்களா? நான் இருக்கேன் – திடீரென வெடிக்கும் அஜித் விஜய் உச்சக்கட்ட மோதல்

கோலிவுட்டில் இரு துருவங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இருவருமே சமகாலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து நடித்தார்கள். அதன்  பிறகு எந்த படத்திலும் இணையவில்லை. அப்போதெல்லாம் விஜய் வீட்டில் இருந்துதான் அஜித்துக்கு சாப்பாடு வருமாம்.

விஜயின் அம்மா ஷோபனா சமையல் என்றால் அஜித்துக்கு மிகவும் பிடிக்குமாம். இருவரும் மாறி மாறி வீட்டுக்கு வந்து போய்தான் இருந்திருக்கிறார்கள். அந்தப் படத்திற்கு பிறகு மீண்டும் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் விஜயும் அஜித்தும் இணைந்தார்கள்.

Advertising
Advertising

ஆனால் அந்த நேரம்தான் காதல் கோட்டை படம் ரிலீஸ் ஆகி அஜித்தை ஒரு நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்ட சமயம். அப்பவே ஒரு குறிப்பிட்ட ரசிகர்களையும் தக்க வைத்துக் கொண்டிருந்தார் அஜித். அதனால் அவரை தேடி பல வாய்ப்புகள் வர நேருக்கு நேர் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : என்னை அவமானப்படுத்துறதுக்கே இந்தப் படத்தை எடுத்தீயா? பாக்யராஜ் படத்தால் எம்ஜிஆருக்கு நேர்ந்த சோகம்

அப்போது பிரிந்த கூட்டணிதான். இன்று வரை சேரவே இல்லை. ஆனால் பர்ஷனலாக இருவருக்குமே எந்த ஒரு மன வருத்தமும் இல்லை, சண்டையும் இல்லை. ஆனால் அவர்களை சார்ந்த ரசிகர்கள் தான் இப்போது தீயாக மாறிவிட்டனர்.

அஜித்தை பற்றி ஒரு ட்விட்டரில் பதிவு வருகிறது என்றால் உடனே விஜயை பற்றியும் போட ஆரம்பித்து விடுகின்றனர். இது அப்படியே போக போக பழிவாங்கும் எண்ணமாக மாறிவருகின்றது. இந்த நிலையில் அஜித் சினிமாவிற்குள் வந்த 31 வருடங்கள் ஆகிவிட்டது. அந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : ரஜினி அழைத்தும் நடிக்க மறுத்த அந்த ஹீரோ.. தலைவருக்கே ஆட்டம் காட்டிய நடிகர்!

சமீபகாலமாக விஜய் ரஜினி பற்றிய பேச்சுதான் அடிக்கடி அடிபட்டுக் கொண்டு வந்தது. ஆனால் இந்த 31 வருட சினிமா பயணத்தை முடித்த அஜித்தால் அவரது ரசிகர்கள் வழக்கம் போல விஜய்க்கு எதிராக நிற்க ஆரம்பித்துள்ளனர்.

அப்படி ஒரு ட்விட்டர் பதிவு தான் இன்று வைரலாகி வருகின்றது. அதாவது ‘ அஜித் தான் உண்டு தன் வேலை உண்டுனு இருக்கும்போதே விஜயால அஜித்த சமாளிக்க முடியல. ஒருவேளை விஜய் மாதிரி அஜித்தும் Audio Launch,Fans Meet,GoldCoin-னு இறங்க ஆரம்பிச்ச விஜயெல்லாம் அஜித்தோட பாதி செல்வாக்குக்கு கூட ஈடாக முடியாது. அஜித் இப்படியே இருக்குற வரை விஜய்கு நல்லது’ என்ற அந்த பதிவு டிரெண்டாகி வருகின்றது.

எங்கே போகிறது இந்த இளைஞர் சமூகம்?!..

 

Published by
Rohini

Recent Posts