விஜய் அரசியலுக்கு வரலாமா? நெத்தியடி பதிலடி கொடுத்த உதயநிதி
இன்று தமிழக அரசியலையே கதிகலங்க வைத்த சம்பவம் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா தான். தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் பரிசினையும் விஜய் இன்று நேரடியாகவே அவர்களை சந்தித்து வழங்கினார். விழாவிற்கு விஜய் பலத்த பாதுகாப்புடன் வந்து இறங்கிய காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் திகைத்தது.
மீடியாக்கள் ரசிகர்கள் என விஜய்யை சுற்றி வளைக்க மிகவும் தள்ளாடியே மேடைக்கு வந்தார் விஜய். மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு அதன் பிறகு பரிசுகளை வழங்கினார். மாணவர்களுடன் பேசும் போது கல்வி குறித்தும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விஜய் பேசினார்.
அது மட்டும் இல்லாமல் அம்பேத்கர், காமராஜர், பெரியார் போன்ற பல தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களை பார்த்து" நீங்கள் தான் வருங்கால வாக்காளர்கள் என்றும் பல புதிய நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் கூறி இருந்தார். அதோடு நாம் இப்போது செய்யும் தவறு என்னவெனில் நம் கையாலேயே நம் கண்ணை குத்திக் கொண்டிருக்கின்றோம் என்று ஓட்டுக்கு ரூபாய் வாங்குவதை பற்றி வெளிப்படையாக பேசினார்.
நீங்கள்தான் உங்கள் பெற்றோர்களிடம் கூறி இனிமேல் ஓட்டுக்கு ரூபாய் வாங்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். இப்படி விஜயின் இந்த விழா ஒரு புறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க இதைப்பற்றி உதயநிதியிடம் நிரூபர்கள் பல கேள்விகளை முன் வைத்தார்கள்.
அதாவது காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை பற்றி படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் விஜய் சொல்லி இருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு "நல்ல விஷயம் தானே" என்று சிரித்தபடியே கூறினார் உதயநிதி. மேலும் மக்களிடம் ஓட்டுக்கு காசு வாங்க வேண்டாம் என விஜய் கூறியிருக்கிறார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என நிருபர் ஒருவர் கேட்க "இதுவும் நல்ல விஷயம் தானே. இதில் ஏதாவது உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா?" என்றும் தன்னுடைய வழக்கமான கிண்டல் பாணியில் கேட்டார்.
மேலும் விஜய் அரசியலுக்கு வரலாமா என்று ஒருவர் கேட்க யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இவங்க தான் வரணும் அவங்க தான் வரணும் என்று சொல்லுவதற்கு யாருக்குமே உரிமை இல்லை. வரலாம்ங்க. ஆனால் விஜய் பேசியதை நான் இன்னும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார் உதயநிதி.
இதையும் படிங்க : ராமர் எல்லாத்தையும் இருட்டலயே பண்றார்.. ஆதிபுருஷ் படத்தை பங்கம் செய்த பயில்வான் ரங்கநாதன்