அதுக்கு திறமை வேணும்.. தலையில சரக்கு இருக்கானு பாருங்க! விஜய் குறித்து மீசை ராஜேந்திரன் பேட்டி
இன்று சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது விஜய் பற்றிய அந்த பேச்சுதான். நேற்று மாணவர்களை ஒன்றுதிரட்டி அவர் பரிசுகளையும் ஊக்கத்தொகையினையும் வழங்கியது பல பேரை ஆச்சரியத்தில் மூழகடித்தது. குறிப்பாக அனைத்து அரசியல் தலைவர்களையும் வாயடைக்க வைத்தது.
இது கிட்டத்தட்ட அரசியலில் விஜய் கால் பதித்து விட்டார் என்பதை குறிப்பதாகவே அமைந்தது என பல பேர் கூறினார். மேலும் வாக்களிப்பது பற்றியும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியதை பற்றியும் பல விவாதங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகர் ம் மீசை ராஜேந்திரன் விஜய்யை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்பது போல தான் தெரிகிறது நேற்று நடந்த விழா. ஆனால் அதிமுக, திமுக இவர்களை தாண்டி விஜயால் ஜெயிக்க முடியாது, ஆனால் அவர்களின் ஓட்டுக்களை வேண்டுமென்றால் பிரிக்க முடியுமே தவிர அவர்களை நெருங்க முடியாது என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தன் ரசிகர்களை மட்டுமே அரசியலில் வரவேண்டும் என்று விஜய் நினைத்திருந்தால் அது தவறு. அதையும் தாண்டி மக்களிடம் நன்கு கனெக்ட் ஆகவேண்டும், கேப்டன் , எம்ஜிஆர் எல்லாம் எப்படி இருந்தார்கள்? நேரிடையாகவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே மக்களிடம் உள்ள பிரச்சினைகளை தானாகவே போய் கேட்டு அறிவார்கள் என்றும் கூறினார்.
குறிப்பாக சக நடிகரிடமே கனெக்ட் ஆகாத விஜய் மக்களிடம் எப்படி கனெக்ட் ஆவார், மேலும் மேடைகளில் ஓங்கி பேச வேண்டும், சரமாரியாக கேள்விக் கனைகளை தொடுக்க வேண்டும் . ஆனால் விஜய்க்கு இந்த திறமை எல்லாம் கிடையாது என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.
மேலும் விஜயின் விக்-ஐ பற்றி கேட்டதற்கு மீசை ராஜேந்திரன் ஆவேசமாக ஒரு மனிதனின் விக்கை பற்றி எல்லாம் பேசக்கூடாது, அது மிகப்பெரிய தவறு, தலையில் சரக்கு இருக்கானு தான் பார்க்க வேண்டும், விஜய்க்கு சரக்கு அதிகமாக இருந்ததனால்தான் இந்த அளவு வளர்ச்சியை அடைய முடிந்தது என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.
இதையும் படிங்க : மத்தியில் குத்தினால் சும்மா விடுவார்களா? விஜயின் அந்தப் பேச்சால் லியோ படத்திற்கு வந்த ஆபத்து