ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தில் சிக்கியிருக்கிறது. ஒருபக்கம் விஜய் கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு சென்றபோது அங்கு அவரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை ஜனநாயகன் படத்திற்காக படக்குழு பயன்படுத்திக் கொண்டது என சிலர் புகார் சொன்னார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை பகிர்ந்து இதுதான் படக்குழு, இதுதான் கேமரா, இந்த இடத்தில் வைத்துதான் படத்திற்காக ஷூட் செய்தார்கள் என்றெல்லாம் பலரும் பதிவிட்டார்கள். குறிப்பாக சவுக்கு சங்கர், நக்கீரன் கோபால் போன்ற பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை சொல்ல பலரும் அதை நம்ப துவங்கி விட்டனர்..
ஆனால், தவெ இதை மறுத்துள்ளது. செய்தியாளன் இதுபற்றி கருத்துதெரிவித்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ‘சில அரசியல் புரோக்கர்கள் காழ்புணர்ச்சி காரணமாக சொல்லும் கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்.. அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்’ எனக் கூறியிருந்தார்.
ஒருபக்கம் இந்த விஷயம் ஹெச்.வினோத்தையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இப்படி எல்லாம் பேசுகிறார்களே.. இதைப் பற்றி கண்டிப்பாக நாம் விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைத்து விஜயை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது அவரிடம் விஜய் ‘நீங்கள் எதுவும் பேசாதீர்கள்.. இது முழுக்க முழுக்க அரசியல்.. நீங்கள் நிறைய படங்களை எடுக்க வேண்டும்.. இதற்குள் நீங்கள் வராதீர்கள்.. இந்த பிரச்சனை அதுவாக சரியாகும்’ என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி விட்டாராம்..
ஆனால் ஹெச்.வினோத்தை பேச விஜய் அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இது விஜய்க்கு மட்டுமில்லை. ஹெச்.வினோத்துக்கும் கெட்ட பெயர்தான்.. மக்கள் அவரையும் சேர்த்து தப்பாக பேசுவார்கள்’ என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..





