அடுத்தவங்க பட்டத்துக்கே ஏன் ஆசைப்படுறீங்க? அதுக்கு ஒரு நல்ல மனசு வேணும் - விஜயை பிச்சி உதறும் பிரபலம்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பூதாகரமாக கிளம்பியுள்ளது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பிரச்சினை. இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்தளவுக்கு புயலாக மாறியிருக்காது. அதை விஜய் செய்ய தவறிவிட்டார். என்னதான் தன் வாயால் நான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் சொல்லாமல் இருந்தாலும் அவர்களுடைய ரசிகர்களின் செயல்பாட்டால் இன்னும் சுனாமியாகவே மாறிவருகிறது.

இதை தடுத்து நிறுத்துவது விஜயின் கடமை என்று சினிமாவை சார்ந்த பல பிரபலங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சன் டிவியில் ஞாயிற்றுக் கிழமையில் ஒளிப்பரப்பான ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசும் போது சிவாஜி, கமல் இருக்கும் போது தனக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கௌரவித்ததற்காக ரஜினி பயந்தார் என்று அந்த மேடையிலேயே கூறினார்.

இதையும் படிங்க : தளபதி 68 பூஜையே போடல!.. அதுக்குள்ள இத்தனை கோடிக்கு போனியாகிடுச்சா!.. ஆனால், விஜய் காரணம் இல்லையாம்!..

மேலும் அந்தப் படம் தனக்கு வேண்டாம் என சொன்னதாகவும் கூறினார். ஆனால் அதை மாதிரி ஒரு இடத்தில் கூட விஜய் வாய்திறக்கவில்லை என பிரபலங்களின் கருத்தாக தெரிகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் விஜயை கிழி கிழி என கிழித்திருக்கிறார்.

சரத்குமார் இப்போ இல்லையாம் அவரது சூர்யவம்சம் படத்தின் 175 வது நாள் கொண்டாட்டத்தின் போதே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுதே விஜய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும் என்று மீசை ராஜேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க : எஸ்.ஏ.சி-யிடம் விஜய் வைத்த வேண்டுகோள்.. அப்பா மீது இவ்வளவு பாசமா?.. இவர போயா அடிக்கிறீங்க!…

மேலும் ஆரம்பத்தில் இளைய தளபதி என்ற பட்டத்தை தான் வைத்திருந்தார் விஜய். அதன் பிறகு தளபதி என மாற்றிக் கொண்டார். ஆனால் தமிழ் நாட்டில் அனைவராலும் தளபதி என கொண்டாடப்படுபவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படி இருக்கும் போது அவரது பட்டத்தை எப்படி தனக்கு வைத்துக் கொள்ளலாம் விஜய் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அது போதாது என்றால் இப்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வாய் திறந்து சொல்லவில்லை என்றாலும் இதற்கு முற்றுப்புள்ளியாவது வைக்கவேண்டும் அல்லவா என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க : விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!…

அதுமட்டுமில்லாமல் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குனா சூப்பர் ஸ்டார் ஆயிடுவியா? அதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும், நல்ல மனிதரா இருக்க வேண்டும், சக மனிதர்களை மதிக்க தெரியனும், சக நடிகர்களை மதிக்க தெரியனும் என விஜயை நார் நாராக பிச்சு எறிந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன்.

 

Related Articles

Next Story