சரத்குமாரால் வசமாக சிக்கிக் கொண்ட விஜய்!.. இத மட்டும் சொல்லியிருந்தால் அவர் ரேஞ்சே வேற..

sarath vijay
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் இப்பொழுது இணையவாசிகளின் டிரெண்டிற்கு ஆளாகியுள்ளார். எல்லாவற்றிற்கும் காரணம் சமீபத்தில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா தான்.சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.

vijay sarath
இந்த விழாவிற்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டாலும் எதிர்பார்த்த சில பேர் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக விஜய் அடுத்து நடிக்க போகும் படத்தில் சம்பந்தப்பட்ட பிரபலங்களை மக்கள் எதிர்பார்த்தனர்.
இதையும் படிங்க : தயாரிப்பாளருக்கே டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்!!… ஆடியோ லாஞ்சில் தில் ராஜுவுக்கு ஏற்பட்ட சோகங்கள்…
அதிலும் அனிருத்தை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை. ஆனால் வாரிசு படத்தில் நடித்த அத்தனை பிரபலங்களும் கலந்து கொண்டனர். என்றைக்கும் இல்லாத அதிசயமாக ரசிகர்களுடன் விஜய் தானாகவே போய் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

vijay
அவருக்கு ஏற்கெனவே அரசியலிலும் ஒரு உயரத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதை இந்த மேடையின் மூலம் காட்டிவிட்டார். ஆம் தமிழக மக்கள் மத்தியில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய் ஆழமாக பதிந்து விட்டார். அந்த அளவுக்கு ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
இதையும் படிங்க : இந்த படத்தை போய் பிடிக்கலைன்னு சொல்லிருக்காரே… இளையராஜா வெறித்தனமாக இசையமைத்த ஹிட் படத்தின் பின்னணி!!
இதனை உண்மையாக்கும் பட்சத்தில் அந்த மேடையில் சரத்குமார் பேசும் போது இப்ப உள்ள சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று குறிப்பிட்டு சொன்னது. இதை கேட்டதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தி கூச்சலிட ஆரம்பித்தனர். இது விஜய்க்கு பெருமை என்றாலும் விஜய் ஆமோதித்திருக்க கூடாது என்றும் சில பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

vijay sarath
கடைசியாக பேச வந்த விஜய் சரத்குமார் பேச்சுக்கு எதாவது கருத்து சொல்லியிருக்க வேண்டும் அல்லது ‘சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கே உரித்தான பட்டமாகும்.இதை சரத்குமார் பெருந்தன்மையாக கூறினாலும் அந்த பட்டத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சொல்லியிருந்தால் இன்று ரசிகர்கள் மத்தியில் விஜயின் ரேஞ்சே வேற மாதிரியாக இருந்திருக்கும்.இதற்கு மேலாக விஜய் ஒரு நல்ல நடிகர், ஏன் அதை கேட்டு அமைதியாக இருந்தார் என்று தெரியவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.