லட்ச லட்சமா அள்ளிக்கொடுத்த விஜய்!.. நெசமாத்தான் சொல்றீங்களா?.. இயக்குனர் சொல்றத கேளுங்க!...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் என்பதையும் தாண்டி ஒரு மாஸ் ஹீரோவாக வசூல் மன்னனாக கலக்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படத்திற்கான பிஸினஸும் ஒரு பக்கம் நடந்து வருகின்றது.
இப்படி ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்னாடியே அதற்கான வியாபாரமும் பல கோடி வரை நடைபெறும் அளவிற்கு ஒரு பணம் காய்க்கும் மரமாகவே மாறிவருகிறார் விஜய். ஆனால் இவரின் ஆரம்பகால பயணங்களை கொஞ்சம் உற்று நோக்கி பார்த்தால் சற்று கரடு முரடானதாகவே இருக்கும்.
அவர் பட்ட கஷ்டங்கள், தோல்விகள் எல்லாமே இப்பொழுது வெற்றியாக உருவெடுத்து நிற்கின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை தந்தது அவர் நடித்த சில படங்கள். அதில் குறிப்பிடத்தக்கது ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘பிரியமானவளே’ போன்ற பல படங்களை குறிப்பிடலாம்.
இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜயை பற்றி சில தகவல்களை கூறினார். அதாவது அவருக்கு டர்னிங் பாயிண்டாக அமைந்த பூவே உனக்காக படத்தை இயக்கியவர் விக்ரமன். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து படமும் விஜய் நடிக்க வேண்டியது தானாம்.
ஆனால் சில பல காரணங்களால் பாதியிலேயே அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். மேலும் அதன் பிறகு விஜயை வைத்து விக்ரமன் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. ஆனால் விஜய் சில உதவிகளை செய்தார் என்று கூறினார்.விஜய் நடித்த பெரும்பாலான படங்களில் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இறந்து விட்டாராம்.
அதனால் அந்த உதவி இயக்குனரின் குடும்பத்திற்கு உதவும் பொருட்டு விக்ரமன் இயக்குனர் விஜயிடம் கேட்க உடனே விஜய் 2 லட்சம் பணத்தை தூக்கி கொடுத்தாராம். அது மட்டுமில்லாமல் இயக்குனர் அசோசியேஷனுக்காக 25 லட்சம் பணத்தையும் உதவியாக கொடுத்தாராம்.
இதுவரை விஜய் செய்த உதவிகள் வெளிவராத நிலையில் இயக்குனர் விக்ரமன் இந்த தகவலை சொன்னது நிரூபருக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.