கோட் படத்தில் கடைசியாக வெளியான மட்ட சாங் அதிரடியைக் கிளப்பியுள்ளது. அது தவிர பாடலுக்கு விஜய் போடும் ஆட்டமும் செம மாஸாக உள்ளது. இந்தப் பாட்டு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான வைபை உண்டாக்கி உள்ளது.
மட்ட சாங்கை யுவன் சங்கர் ராஜாவுடன் செண்பகராஜ், வேலு, சாம், நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இவர்கள் தங்களது அனுபவத்தை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளனர். வாங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
முதல் 3 பாடலைப் பொருத்தவரைக்கும் ஒரு சிலர் அந்தப் பாடல்களுக்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்தார்கள். டிரெய்லருக்குப் பிறகு இந்தப் பாடலை வெளியிட்டதால் ரொம்ப ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது.
இந்தப் பாடலுக்கான விஷூவலைப் பார்க்க வேண்டும் என்று பாடலைப் பாடிய குழுவினரே ஆர்வமாக உள்ளார்கள். இந்தப் பாட்டுக்கு மட்டும் திரிஷா வருவதாகவும் சொல்லப்படுகிறார்கள். மட்ட, மஞ்ச சட்டை ரெண்டும் சேர்ந்தவர் தோனி. அதனால தளபதி, தோனி, திரிஷா காம்போவா இந்தப் பாடல்னு பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்தப் பாடலைப் பிரிச்சி பிரிச்சி எடுத்ததனால இது எப்படி வரும்னே எங்களுக்குத் தெரியல. அப்புறம் தான் இது ஒரு சாங்காக வந்துருக்குன்னு எங்களுக்குத் தெரிஞ்சதுன்னு சொல்றாங்க.
யுவன் சார் ரொம்ப ஜாலியா ரிலாக்ஸா உட்கார்ந்து ஒர்க் பண்ணினாரு. ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் பாடலைப் பாடிட்டோம். முதல்ல விசில் போடு பாடலைப் பாடினோம்னு சொல்றாங்க. படத்துல வர்ற தீம் சாங்ஸ் எல்லாமே நாங்க தான் பாடியிருக்கோம் என்கின்றனர் அந்த நால்வர்.
‘மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாருக்கிட்ட, மட்ட மட்ட ராஜமட்ட, எங்க வந்து யாருக்கிட்ட, அட்ட அட்ட அடிச்ச மட்ட மட்சிக்கடி மஞ்ச சட்ட’ என பாடல் வரிகள் பட்டையைக் கிளப்புகின்றன. யுவன் சார் கடைசி வரைக்கும் இந்தப் பாடலை மெருகேற்றிக்கிட்டே தான் இருந்தாங்க.
தளபதி என்ட்ரியோட ஓபனிங் பிஜிஎம் ரொம்ப அருமையா இருந்தது. நாங்களே பல சமயம் விஷூவல்ஸ் பார்க்க முடியாது. எல்லாருமே ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்காங்க. பர்ஸ்ட் வந்த சாங்ஸ்சோட நெகடிவிட்டி கூட ஆரம்பத்துல சோசியல் மீடியால டிரெண்ட் ஆனதால தான் வந்தது.
Also read: கோட் சிறப்பு காட்சி இருக்கா? இல்லையா?!.. காத்திருக்கும் படக்குழு!.. என்னதான் நடக்குது!…
ஆனா போக போக அவங்களுக்கு பிடித்துவிட்டது. பேக் ரவுண்டு ஸ்கோர் பண்ணும்போது ரொம்ப என்ஜாய் பண்ணினோம். மட்ட சாங்குக்கும் அப்படித் தான் இருந்தது. யுவன் சார் நீங்க வித்தியாசமா எதாவது பண்ணுங்கன்னு சொன்னாரு. அதனால நிறைய வெரைட்டிஸ் நாங்களே பண்ணினோம்.
இந்தப் பாடல் ஸ்ட்ரக்சர் இல்லாம ஸ்டார்ட் பண்ணது. தல அஜீத் இந்தப் பாடலைப் பாடி ரொம்ப அசந்து போய் பாராட்டியுள்ளார். அதே போல தளபதி விஜய்க்கு மங்காத்தா தீம் ரொம்ப பிடிக்குமாம்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…