கோட் படத்தில் ரஜினி, அஜீத், எஸ்.கே., பிரசாந்த், பிரபுதேவா, அஜ்;மல், கேப்டன் விஜயகாந்த், மோகன் என பல தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து இழுத்து விட்டார் தளபதி விஜய். இந்த தில்லு அவரால் மட்டுமே முடியும் என்கிறார் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. இது குறித்து வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்ப்போமா…
ரஜினி, அஜீத் ஆஸ்கர் பிலிம்ஸ் பாஸ்கர் பல படங்கள் எடுத்தாரு. அவர் தான் பைரவி படத்தை எடுத்தாரு. அவரோட மகன் தற்போது பேட்டி கொடுக்கும்போது விஜயை வைத்து விஷ்ணு படத்தை எடுத்திருப்பாரு.
அவருக்கு அப்போ 3 லட்சம் தான் சம்பளம். 1 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தோம். அதுக்கு அப்புறம் படம் ரிலீஸாகி 2 வாரம் கழிச்சித் தான் மீதியுள்ள 2 லட்சத்தைக் கொடுத்தோம்.ஆனா அவர் இவ்ளோ பெரிய ஆளா வருவாருன்னு நினைக்கவே இல்லை.
கோட் படத்துல தலைவர் விஜய் என்ற இடத்துக்கு வந்துடறாரு. அதுல பபிள்கம்மைத் கையால தட்டி வாயில போடுவாரு. அது மன்னன் படத்துல ரஜினி ஸ்டைல்.
கடைசில பைப் வச்சி நீ யாரோட ரசிகன்னு கேட்கும்போது மங்காத்தா பிஜிஎம் வரும். தியேட்டர்ல பயங்கர விசில். விஜய்க்கு சிவகார்த்திகேயன் டைமிங்க்ல கேட்குற கேள்வி, பதில் எல்லாம் பிடிச்சிருந்தது. துப்பாக்கி ரிலீஸ் சமயத்துல எல்லாரு கையிலயும் துப்பாக்கி இருக்குறது பெரிசு இல்ல.
ஆனா எத்தனை பேரு கிட்ட துப்பாக்கி டிக்கெட் இருக்குங்கறது தான் முக்கியம்னு ட்வீட் போட்டாரு. அது வைரல் ஆனது. அதனால தான் கோட்ல அவருக்கு கேமியோ ரோல். அப்படி ஒரு மாஸ் டயலாக்.
‘அண்ணே உங்களுக்கு வேற வேலை இருக்கு. இதைக் கொடுத்துட்டுப் போங்க. நான் பார்த்துக்கறேன்’னு சொல்வாரு. அந்த டயலாக்கை வைக்கிறதுக்கு விஜய்க்குப் பெரிய மனசு வேணும். இந்தியாவிலயே அதிகமாக இன்கம் டேக்ஸ் கட்டுனதுல 2வது இடத்துல விஜய் இருக்காரு. 80 கோடி ரூபாய் கட்டியிருக்காரு.
Also read: Goat படத்தோட ஒரிஜினல் ‘ஜீவன்’ யாருன்னு பாருங்க!
இதை விட வேறு என்ன வேணும். அப்படி இருக்குறவரு 200 கோடியைத் தூக்கிப் போட்டுட்டு அரசியலுக்குள்ள போறாரு. அதுக்கு எல்லாம் பெரிய துணிச்சல் வேணும். அவர் அரசியலுக்கு வந்து வெற்றியைப் பெறட்டும்.
சினிமாவில் தளபதி என்ற அவரது இடத்தை சிவகார்த்திகேயன் பிடிக்கவும் வாய்ப்பு இருக்குது. அதற்கான நேரமும் இருக்குது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…