
Cinema News
தளபதி விஜயை மிரட்டிய முரட்டு வில்லன் திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ஒரு சில மிரட்டல் வில்லன்கள் காலம் கடந்தும் சமகாலத்து ஹீரோக்களையும் தங்களது நடிப்பால் மிரட்டி வருவர். அப்படி காலம் கடந்து மிரட்டியவர் என்றால் தமிழில் சட்டென நினைவுக்கு வருவது ரகுவரன் தான். ஆனால் சத்தமில்லாமல் அந்த பெயரை சம்பாதித்தவர் சலீம் கவுஸ்.
இவர் தமிழில் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்திற்கு வில்லனாக நடித்தும், வெற்றி விழா படத்தில் கமலுக்கு வில்லனாக ஜிந்தா எனும் கதாபாத்திரத்தில் நடித்தும் அப்போதே தமிழ் ரசிகர்களை மிரட்டியவர் சலீம் கவுஸ்.
அடுத்ததாக வேட்டைக்காரன் படத்தில் தளபதி விஜய்க்கு நேரெதிர் வில்லனாக மிரட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் சலீம் கவுஸ். தற்போதைய சினிமா ரசிகர்களுக்கு வேட்டைக்காரன் வில்லனாக தான் இவரை தற்போதும் அறிந்திருப்பார்கள்.
இதையும் படியுங்களேன் – காலம் போன கடைசியில் இதெல்லாம் இப்போ யாரு கேட்டா.?! சன் பிக்ச்சர்ஸ் செய்யும் வேலைய பாருங்க..,
இவர் கடைசியாக தமிழில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள கா திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவருக்கு வயது 70 வயது ஆகிறது. வயது மூப்பு காரணமாக இவர் இறந்துவிட்டார். இந்த செய்தி தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.