‘லியோ’ படத்தால் விஜய்க்கு அடிச்ச பம்பர்! - எக்குத்தப்பா எகிறிய சம்பளம்! அடேங்கப்பா

vijay
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இன்று கோலிவுட்டில் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்து வருகிறார். தற்போது லியோ படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார் விஜய். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. ஏனெனில் ஒரு பக்கம் லோகேஷ் படம் இன்னொரு பக்கம் ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் மாபெரும் வெற்றியடைந்த மாஸ்டர் திரைப்படம்.

vijay1
அதனால் இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு முக்கால் வாசி முடிந்த நிலையில் படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக தேதியை லாக் செய்து விட்டார் லோகேஷ்.
இந்த நிலையில் விஜயின் அடுத்தப் படமான தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவதாக இருந்த நிலையில் திடீர் திருப்பமாக படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். மேலும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay2
இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கான சம்பளம் 200 கோடி என தகவல் கசிந்துள்ளது. அதற்கு காரணம் லியோ படம் பண்ண பிசினஸ் தானாம். 400 கோடி வரை பிஸினஸ் செய்துள்ள லியோ படத்தால் முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் 175 கோடி என பேசியிருந்ததாம். அதன் பிறகு கொஞ்சம் அதிகரித்து 200 கோடி வரை பேசி முடித்திருக்கிறார்களாம்.
இதையும் படிங்க : எம்ஜிஆர்-என்.எஸ்.கே வாழ்க்கையில் நடந்த ஒரே மாதிரியான அனுபவம்! – இப்படியும் சில மனிதர்கள்!