திடீரென வந்து உலக சாதனை படைத்த விஜய்!.. இன்ஸ்டாவை கையில் எடுக்க இதுதான் காரணமா?..

by Rohini |   ( Updated:2023-04-04 06:52:06  )
vijay
X

vijay

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் விஜய். ரஜினி, கமலையும் தாண்டி சினிமா ஒரு நடிகரைக் கொண்டாடுகிறது என்றால் அது விஜயை மட்டும் தான். ஆரம்பகாலத்தில் விஜய் கூட இதை எதிர்பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு அசுர வளர்ச்சி.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் ஒரு வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரஜினிக்கு இருக்கும் அந்த பலம் அடுத்தப்படியாக விஜய்க்கு தான் இருந்து வருகிறது. விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு அடுத்த செட்யூலை சென்னையில் உள்ள
பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு செட் போட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாம். அதற்கான வேலைகள் தான் இப்போது சென்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் விஜய் இன்ஸ்டாவில் தனது புதிய கணக்கை தொடங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் விஜய் இப்போது ட்விட்டரை விட அதிக பிரபலமான இன்ஸ்டாவிலும் கணக்கை தொடங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இன்ஸ்டாவில் கணக்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை
ஆக்கிரமித்துக் கொண்டு புதிய சாதனை படைத்தார். இப்போது 4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் விஜய் உலக அரங்கில் 3 வது இடத்தில் இருக்கிறார்.

இதற்கு காரணமாக இருப்பவர் விஜய்க்கு நிழலாகவும் எல்லாமுமாகவும் இருக்கும் அவரது மேலாளரான ஜெகதீஷ் தானாம். அவர் ஏற்கெனவே சோசியல் மீடியா வளரும் நேரத்திலேயே சமூக வலைதளங்களில் இருந்தவர். மேலும் என்ன மாதிரியான போஸ்ட் போட்டால் வைரலாகும் என்பதையும் அறிந்தவர்.

இதையும் படிங்க : மணிவண்ணன் இவ்வளவு பெரிய அறிவாளியா? இதுவரை யாரும் அறியாத அரிய தகவல்…

அஜித் எப்படி சுரேஷ் சந்திராவை நம்புகிறாரோ அதே போலவே விஜயும் ஜெகதீஷை நம்பிக் கொண்டிருக்கிறார். விஜயின் வளர்ச்சியை இன்னும் ஒரு படி மேலாக எடுத்துக் கொண்டு போவதில் ஜெகதீஷ் முனைப்பு காட்டி வருகிறார் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

Next Story