சொந்த தந்தையை இப்படியா அவமானப்படுத்துறது… என்ன இருந்தாலும் விஜய் இப்படி பண்ணிருக்க கூடாது…
விஜய் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக திகழ்கிறார் என்றால் அவரின் அயராத உழைப்பும், வசீகரமான நடிப்பும்தான் காரணம். எனினும் விஜய்யின் இந்த அபார வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சியும் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறார் என்பதை நாம் மறுக்கமுடியாது.
விஜய் தொடக்கத்தில் எஸ்.ஏ.சி இயக்கிய பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எனினும் விஜய்யை ஹீரோவாக ஆக்க வேண்டும் என்பதில் எஸ்.ஏ.சிக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. விஜய்யை ஒரு அரசு அதிகாரியாகத்தான் ஆக்கவேண்டும் என எஸ்.ஏ.சி நினைத்தாராம்.
ஆனால் விஜய் பள்ளிப்பருவத்தில் இருந்தே தன்னை எப்போது ஹீரோவாக வைத்து படம் இயக்குவீர்கள் என கேட்டுக்கொண்டே இருந்தாராம். விஜய் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ.சி. ஆனால் அத்திரைப்படம் சரியாக போகவில்லை.
எனினும் அதனை தொடர்ந்து “செந்தூரபாண்டி” என்ற திரைப்படத்தில் விஜயகாந்த்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்து, விஜய்யை ஹீரோவாக நடிக்க வைத்தார். அத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் என்ற நடிகர் பரவலாக அறியப்பட்டார்.
இதனை தொடர்ந்து “ரசிகன்”, “தேவா”, “விஷ்ணு”, “கோயம்பத்தூர் மாப்பிள்ளை” போன்ற திரைப்படங்களில் நடித்தார் விஜய். ஆனால் விஜய்யின் கேரியரில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி. தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியை சந்திக்க, “பூவே உனக்காக” என்ற திரைப்படம் உருவானது. இத்திரைப்படம் விஜய்யின் கேரியரில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த விஜய், ரசிகர்களின் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக உயர்ந்துள்ளார். இவ்வாறு விஜய்யின் வளர்ச்சியில் முக்கிய பங்காக எஸ்.ஏ.சி திகழ்ந்தார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சிக்கும் கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக பல செய்திகள் வெளிவந்தன. கடந்த ஆண்டு ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சி “எனக்கும் என் மகனுக்கும் சண்டை இருப்பது உண்மைதான். எல்லோர் வீட்டிலும் உள்ள மகனுக்கும் தந்தைக்கும் எப்படி கருத்து மோதல் நிலவுமோ அது போல்தான் எனக்கும் விஜய்க்கும் நிகழ்ந்திருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை” என கூறியிருந்தார்.
சமீபத்தில் கூட “வாரிசு” ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது பெற்றோரை பார்த்த விஜய், அவர்களுடன் சிரித்துக்கூட பேசவில்லை என ரசிகர்கள் குறைப்பட்டுப்போனார்கள். இந்த நிலையில் விஜய், தனது தந்தையான எஸ்.ஏ.சியை அவமானப்படுத்தியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது ஒரு நாள் தனது பேரப்பிள்ளைகளை பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்த எஸ்.ஏ.சியும் அவரது மனைவி ஷோபாவும், விஜய் தங்கியிருக்கும் நீலாங்கரை வீட்டிற்குச் சென்றார்களாம். எஸ்.ஏ.சியும் ஷோபாவும் தனது வீட்டிற்கு வந்திருக்கும் தகவலை அங்குள்ள வேலையாள் ஒருவர் வீட்டிற்குள் இருக்கும் விஜய்யிடம் சென்று கூறினாராம்.
இதையும் படிங்க: சோவுக்கும் காமராஜருக்கும் இவ்வளவு பெரிய மோதல் ஏற்பட்டதா?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!
அதன் பின் அந்த வேலையாள் வெளியே வந்து அவர்களிடம் “சார் அம்மாவை மட்டுந்தான் உள்ளே வரச்சொல்லியிருக்கிறார். ஐயாவை இங்கேயே இருக்கச்சொல்லிவிட்டார்” என்று கூறினாராம். இவ்வாறு எஸ்.ஏ.சியை விஜய் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருந்திருக்கிறார். இதனை கேட்டு எஸ்.ஏ.சிக்கு மனம் நொந்துப்போனதாம். ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், தந்தையை இப்படியா நடத்துவது??