More
Categories: Cinema News latest news

மகனை களம் இறக்கி விஜயின் கோபத்திற்கு ஆளான லைக்கா!.. அட இது அவருக்கே தெரியாதாம்!…

கடந்த சில நாட்களாக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுவது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுத்ததுதான். பல திறமையான உதவி இயக்குனர்கள் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடிகொண்டிருக்கும் நிலையுயில், லைக்கா நிறுவனம் அந்த வாய்ப்பை விஜய் மகனுக்கு கொடுத்துள்ளது.

சஞ்சய் அப்பாவை போல நடிகராவார் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் நான் இயக்குனராக மட்டுமே இருப்பேன் என முடிவெடுத்துள்ளார். சஞ்சய் தனது தாத்தா வீடு இருக்கும் லண்டனில்தான் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார். திரைக்கதை, இயக்கம் தொடர்பான சில படிப்புகளையும் அங்கு அவர் படித்துள்ளார். சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். சஞ்சயின் அம்மா சங்கீதாவின் அப்பாவும், லைக்கா சுபாஷ்கரனின் அப்பாவும் நண்பர்கள் என்ற முறையில் இந்த வாய்ப்பு சஞ்சய்க்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: தாத்தா வழியில் பேரன்… ஜேசன் எண்ட்ரிக்கு எஸ்.ஏ.சி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? பாசம் தான்!

இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவெனில் சஞ்சய் இப்படி திடீரென லைக்கா மூலம் இயக்குனராவார் என விஜயே எதிர்பார்க்கவில்லையாம். இந்த விஷயத்தில் அவருக்கு கோபமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் மகனுக்கும். லைக்காவுக்கும் வாழ்த்து கூட சொல்லவில்லை என பேசப்படுகிறது.

லைக்கா தயாரித்த முதல் படமே விஜய் நடித்த கத்தி படம்தான். அதன்பின் லைக்காவுக்கு இதுவரை விஜய் கால்ஷீட் கொடுக்கவில்லை. பல வருடங்களாக விஜயிடம் கால்ஷீட் கேட்டு வருகிறது லைக்கா. அவரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவரின் மகனை இயக்குனராக அறிவித்திருப்பதால் கோபமடைந்துள்ள விஜய் லைக்கா நிறுவனத்திற்கு இனிமேல் கால்ஷீட் கொடுக்க வாய்ப்பில்லை என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க: மகனுக்காக இத கூட பண்ணல! தனித்தே விடப்பட்ட ஜேசன் விஜய் – அடுக்கடுக்கான உண்மைகளை கூறிய பிரபலம்

அது எப்படி விஜய்க்கு தெரியாமல் இது நடக்கும் என நினைப்பீர்கள். ஆனால், சினிமாவில் இது சாத்தியம்தான். கடந்த சில வருடங்களாகவே விஜயின் மனைவி சங்கீதா தனது மகள் மற்றும் மகளுடன் லண்டனில்தான் வசித்து வருகிறார். விஜய்க்கு இப்போது அப்பாவிடம் சுமூக உறவு இல்லை. விஜய் இப்போது தனியாகத்தான் வசித்து வருகிறார். எனவே, இதில் என்ன நடந்திருக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை.

விஜய் கோபப்பட்டு கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என தெரிந்தே துணிச்சலாக ஜேசன் சஞ்சய்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளது லைக்கா. இதில் என்னெனென்ன நடக்கப்போகிறது என்பதையும், சஞ்சய் வெற்றிப்படங்களை கொடுத்து அப்பாவின் மனதில் இடம் பிடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜயின் மாஸ்டர் ப்ளான்!.. ஜேசன் சஞ்சய் எண்ட்ரிக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?!.. என்னங்க உங்க லாஜிக்!

Published by
சிவா