இப்படியா காப்பி அடிப்பாங்க!.. அரசியல் ரூட்டுக்கு அந்த நடிகரை அப்படியே ஃபாலோ பண்ணும் தளபதி!.

Published on: August 5, 2023
vijay
---Advertisement---

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க போகிறார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர், இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணியை சந்திக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

சட்ட வல்லுநர்களுடன் விஜய் சந்திப்பு மேற்கொள்வது அரசியல் கட்சி தொடங்குவதற்காக தான் என்றும், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்காக தான் என்றும் தகவல்கள் வெளியானது. இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில், இதே போல தான் முதலில் விஜயகாந்த்தும், வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி எல்லாம் தொடங்கினார்.

இதையும் படிங்க- ரஜினி, விஜய் ரெண்டு பேரும் ஓரமா போங்க!.. மேல ஒருத்தர் இருக்கார்!.. கொளுத்திப்போட்ட ரோபோசங்கர்…

அதன் பிறகு அரசியல் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டார். அதே பாணியை தான் விஜயும் தற்போது பின்பற்றிவருகிறார். தேர்தல் சமயத்தில் இந்த அணிகள் எல்லாம் தேமுதிகவிற்கு மிகவும் பயன்பட்டன. இதை பின்பற்றி, விஜயும் வழக்கறிஞர் அணியை உருவாக்கியுள்ளார். அவர்களை வைத்து, சட்ட ரீதியாக வரும் பிரச்சனைகளை அணுக திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில், எல்லா பக்கத்தில் இருந்தும் பிரச்சனைகள் வரும். எனவே முன்னெச்சரிக்கையாக வெவ்வேறு அணிகளை உருவாக்கிவிட்டால், அந்த சமயத்தில், சமாளித்துக்கொள்ளாம். அடுத்தடுத்து மற்ற அணிகளை விஜய் தொடங்கிவிடுவார் என்று கூறப்படுகிறது.விஜய் அரசியலுக்கு வருவதாக இருந்தால், இது ஒரு சரியான திட்டமிடல்.

அதற்கடுத்து நாளை நடிகர் விஜய் கேரளா ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். எனவே லியோ படம் வெளியாகபோவதை முன்னிட்டு அவர் கேரளாவுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அடுத்து தளபதி 68 படத்திற்கான படப்பிடிப்பு  செப்டம்பர் மாதம் தொடங்கிவிடும் என்றும் வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க- இத்தனை ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரா நாகார்ஜூன்?!.. மனுஷன் சைலண்டா இருக்காரே!…

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.