நடிச்சது போதும்!..தயாரிப்பாளராக களமிறங்கும் விஜய்!.. எந்த படம்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க வருகிற பொங்கல் அன்று வாரிசு படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்குகிறார். மேலும் தமன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போக வாரிசு படத்தோடு துணிவு படம் மோத இருப்பதால் இன்னும் ஆர்வம் அதிகமாகவே இருக்கின்றது ரசிகர்கள் மத்தியில்.
இதையும் படிங்க : கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணத்தால் மனம் நொந்த கீர்த்தி சுரேஷ்!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவு!…
விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா பண்டிகை போன்று தான். ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் சமயம் மேலதாளங்களுடன் தங்கள் வீட்டு நிகழ்ச்சியை நடத்துகின்ற உணர்வில் தான் ரசிகர்கள் இருப்பார்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் ஒரு மாஸ் நடிகராக என்றைக்கு மாறினாரோ அதிலிருந்தே விஜய்க்கு உண்டான மார்கெட்டும் எகிறு விட்டது.
படரிலீஸ் முன்னாடியே ஒட்டு மொத்த வியாபாரமும் நடந்து முடிந்து விடும். அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்தத்தாக லோகேஷ் இயக்கத்தில் தளபதி - 67 படத்தில் இணைய இருக்கிறார் விஜய். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருக்கிறார்.
மேலும் இது ஒரு ஹாலிவுட் படத்தின் ஒரு காப்பியாகவும் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. மேலும் ஏகப்பட்ட வில்லன்களை லோகேஷ் இணைத்துக் கொண்டிருக்கிறார். நடிகர் அர்ஜூன், நடிகர் விஷால், மலையாள நடிகர் ப்ரித்விராஜ், நிவின் பாலி, சஞ்சய் தத் போன்ற ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க : இதுக்கு அவர நேரடியாவே திட்டிருவேன்.. அத மட்டும் செய்யமாட்டேன்!.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த ரகுவரன்!..
இந்த படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 400 கோடி வரை எட்டியுள்ளதாம். வெளி நாட்டு உரிமை, தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமை, டிஜிட்டல் உரிமை என மொத்தமால 400 கோடி சில்லரை வரை வியாபாரம் நடந்து முடிந்து விட்டதாம். விமர்சன ரீதியாக இல்லையென்றாலும் சமீபகாலமாகவே விஜய் படம் வியாபார ரீதியாக நல்ல வசூலை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்திற்கு கிட்டத்தட்ட 150 கோடி வரை லாபம் என்று பேசப்பட்டு வரும் சமயத்தில் மறைமுகமாக இந்த படத்திற்கு இன்னொரு தயாரிப்பாளரும் செயல்படுகிறாராம். அவர் வேற யாருமில்லை. நடிகர் விஜய் தான். தளபதி - 67 படத்திற்கு விஜயும் ஒரு தயாரிப்பாளராக இருக்க போகிறாராம். அந்த வகையில் பார்த்தால் சம்பளமே கோடியில் அள்ளும் விஜய் இப்பொழுது வியாபார பங்காக இன்னும் சில கோடிகளை அள்ளுவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.