அஜித் சம்பளம் மேலே போக காரணமே விஜய்தான்!.. பிரபல தயாரிப்பாளர் கொடுத்த ஷாக்..

Published on: April 14, 2024
ajith
---Advertisement---

Ajith Vijay: இன்று தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருமே ஒன்றாக ஒரே நேரத்தில் சினிமாவிற்குள் நுழைந்து சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இன்று இருவருக்கும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். இருவரின் படங்கள் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இருவரும் தங்களுக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அவரவர் கெரியரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி படம் ரிலீஸுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அருமையான வாய்ப்பை எம்ஜிஆருக்காக விட்டுக் கொடுத்த ஜெய்சங்கர்… எந்தப் படத்திற்கு தெரியுமா?

அதனை அடுத்து விஜய் எச்.வினோத் இயக்கத்தில் மற்றுமொரு புதிய படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதுதான் அவர் நடிக்கும் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த கையோடு விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்த இருக்கிறார். இந்தப் பக்கம் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பெரிய பெரிய நடிகர்களின் சம்பளம் குறித்த பேச்சுதான் முழுவதுமாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி லோகேஷ் படத்திற்காக 280 கோடி வரை சம்பளம் வாங்க இருக்கிறார் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதே போல் அஜித் குட் பேட் அக்லி படத்திற்காக 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: எல்லாம் பண்ணிட்டேன்!.. அவன மாதிரி நான் நடிக்கணும்!.. இயக்குனரிடம் சொன்ன நடிகர் திலகம்!..

இதை பற்றி சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனும் தனஞ்செயனும் பேசிக் கொண்டிருந்த போது ஊடகங்கள்தான் நடிகர்களின் சம்பளத்தை அதிகரிக்கின்றன என்றும் அஜித்தை பொறுத்தவரைக்கும் குட் பேட் அக்லி படத்தில் ஒரு பெரிய சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால் இந்தப் படத்திற்கு பிறகு அடுத்த படத்தில் அஜித் இதை விட அதிகமாக எதிர்பார்ப்பார் என்றும் கூறினார்கள்.

மேலும் சித்ரா லட்சுமணன் அஜித்தின் சம்பளத்தை முடிவு செய்வதே விஜய்தான். ஏனெனில் விஜய்க்கு ஒரு படத்திற்கு அதிகமாக கொடுக்கும் போது தானாக அஜித்தின் சம்பளமும் அதிகரிக்கப்படுகிறது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க:கோயிலுக்காக இடம் கேட்டு தர மறுத்த அர்ஜூன்! பின்னாளில் அவருடைய இடத்திற்கு வந்த ஆபத்து

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.