வசூலில் இந்திய அளவில் விஜய்தான் நம்பர் ஒன்.. அட ரஜினி, ஷாருக்கான் கூட இல்லயே!...

#image_title
Actor vijay: 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய விஜயின் பயணம் இன்னமும் தொடர்கிறது. 30 வருடங்களாக காதல், காமெடி, ஆக்சன் மற்றும் மாஸ் படங்களில் நடித்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார் விஜய். அதனால்தான் அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய் சிறுவனாக இருக்கும்போது சூப்பர்ஸ்டாராகவும் வசூல் மன்னனாகவும் இருந்தவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் மூலம் இப்போது தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால், சத்தமே இல்லாமல் விஜய் ரஜினியை ஓவர் டேக் செய்திருக்கிறார் என்பதே உண்மை.

vijay 69
துள்ளுவதோ இளமை, காதலுக்கு மரியாதை என தொடார் ஹிட் படங்களை கொடுத்து டேக் ஆப் ஆனவர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான கில்லி படம் தமிழில் 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்கிற சாதனையை பெற்றது. விஜய் படங்களை ரசிகர்கள் குடும்பத்துடன் போய் பார்க்கிறார்கள்.
இப்போதும் கோலிவுட்டில் முதல்நாள் அதிக வசூலை பெறுவது விஜய் படங்கள்தான். இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் கல்கி ஆகிய படங்கள் முதல் நாள் அதிக வசூலை பெற்ற படமாக இருக்கிறது. ஆர்.ஆர்.ஆர். படம் முதல் நாளில் 220 கோடி வசூலை பெற்றது.

Goat
ஆனால், தமிழ் சினிமாவில் விஜயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான லியோ படம் முதல் நாளில் 140 கோடி வசூலை பெற்றது. இப்போது கோட் படமும் முதல் நாளில் 120 கோடியை தாண்டியிருக்கிறது. ரஜினியின் ஜெயிலர் படம் முதல் நாளில் 72 கோடி வசூலையும், கமலின் விக்ரம் படம் 66 கோடி வசூலையும், ஷாருக்கனின் ஜவான் படம் 75 கோடி வசூலையும் பெற்றது.
ஆனால், கோட் படம் 126 கோடியை வசூல் செய்திருக்கிறது. எனவே, தமிழ் சினிமாவில் முதல் நாள் அதிக வசூல் பெறும் இடத்தில் விஜயின் படங்களே இருக்கிறது. இந்த சாதனையை மற்ற நடிகர்கள் முறியடிப்பார்களா என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க: 2 நாள் வசூல் எவ்வளவு?!.. பாக்ஸ் ஆபிசில் கோட் ஆக மாறிய தளபதி!..