அஜித்திற்கு போட்டி விஜய் இல்லை...இவர் தான்...! புது புரளியை கிளப்பும் மூத்த பிரபலம்....
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என இரு தூண்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு சினிமாவையே ஆண்டு வருகின்றனர். ஆரம்பகாலங்களில் இருந்தே விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே போட்டி பொறாமை இவைகள் எல்லாம் சமூக வலைதளங்களில் தினந்தோறும் நாம் பார்த்த வண்ணம் இருக்கிறோம்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு முற்றி புள்ளி வைக்கிறார் நடிகரும் பத்திரிக்கையாளருமாக பயில்வான் ரெங்கனாதன். சினிமாவில் அஜித்திற்கு போட்டி விஜய் இல்லை நடிகர் விக்ரம் தான் என கூறுகிறார். இரண்டு பேருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றது.
அகத்தியன் இயக்கத்தில் காதல் கோட்டை படத்தில் எழுச்சி நாயகனாக காதல் மன்னனாகவே வாந்திருப்பார் அஜித். அதே போல் பாலா இயக்கத்தில் சேது படத்தில் கிட்டத்தட்ட அதே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் விக்ரம். சிட்டிசனில் ஒரு காணாமல் போன கிராமத்திற்காக அரசியல் வாதிகளை பந்தாடியிருப்பார் அஜித்.
அதே போல் சாமுராய் படத்தில் அதே மாதிரியான கதையில் அரசியல் வாதிகளை விழி பிதுங்க வைத்திருப்பார் விக்ரம். இதே மாதிரியான ஏகப்பட்ட படங்கள் இவர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் படங்களாகவே இருந்திருக்கின்றன. மேலும் படத்திற்கு ஏற்ப தனது கெட்டப்-களை மாற்றுவதில் இருவரும் சளைத்தவர் அல்ல என பயில்வான் ரெங்க நாதன் கூறுகிறார்.