விஜய் 100 கோடி... நான் தெருக்கோடி...தளபதிக்கு மாஸான ஹிட் படம் கொடுத்த இயக்குனரின் அவல நிலை...!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் விஜய் இடம்பிடிப்பார். கிட்டத்தட்ட 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் இருக்கிறது. ஆரம்பகாலங்களில் பார்த்தால் இவர் நடித்த ஒரு சில படங்கள் மக்கள் மனதில் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பூவே உனக்காக, லவ் டுடே போன்ற படங்கள் இவருக்கு நடிகர் அந்தஸ்தை பெற்று தந்த படமாகும். ஆனால் அதை எடுத்த இயக்குனர்களின் நிலைமைய பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கின்றது. அந்த வகையில் லவ் டுடே படத்தை எடுத்த இயக்குனர் பாலசேகரன் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக அவரே கூறியுள்ளார்.
விஜய்க்கு நல்ல பேரை வாங்கி கொடுத்த படமாகவும் மெகா ஹிட் அடித்த படமாகவும் லவ் டுடே அமைந்தது. இந்த நிலையில் விஜயை எத்தனையோ தடவை சந்திக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் அவருடன் இருக்கும் வேலையாட்கள் அவரை சந்திக்க விடுவதில்லை. அவரிடமும் போய் சொல்வதுமில்லை. பிறந்த நாள் வாழ்த்து கூட இன்னும் நேரில் சந்தித்து சொன்னதில்லை. அவர் இன்று 100 கோடியில் இருக்கிறார். ஆனால் நான் தெருக்கோடியில் இருக்கிறேன் என்று ஆதங்கத்துடன் கூறினார்.