அப்பா சொன்னதுக்காக மோகன்லாலையே அவமானப்படுத்துவதா? விஜய் செஞ்ச காரியத்தால் கடுப்பான நடிகர்
விஜயின் வளர்ச்சியை பற்றித்தான் சமீபகாலமாக பத்திரிக்கை நண்பர்களும் ஊடகங்களும் பேசிக் கொண்டு வருகின்றனர். ஒரு பக்கம் அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் விஜய் செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட விஜய் கல்வி பயிலகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மாணவர்கள் படிக்கும் வண்ணம் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
இப்படி சினிமா , அரசியல் என இருபக்கமும் தன்னுடைய நகர்வுகளை சுமூகமாக நகர்த்தி வருகிறார். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் முழுவதுமாக அரசியலில் தன்னை ஈடுபடுத்துவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரான ஜோ மல்லூரி நடிகர் விஜயை பற்றி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார்.
ஜோ மல்லூரி கும்கி படத்தில் லட்சுமிமேனனுக்கு அப்பாவாக நடித்தவர். விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்திலும் மோகன்லாலுக்கு வலது கரமாக நடித்திருப்பார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் மோகன்லால் மற்றும் ஜோ மல்லூரியை தன்னுடைய வீட்டிற்கு இரவு விருந்துக்கு அழைத்தாராம்.
அப்போது மோகன்லால் அவரது மனைவி மற்றும் ஜோ மல்லூரி ஆகியோர் வந்தார்களாம். இரவு 7.30மணியளவில் விஜய் வீட்டிற்கு வர அவர்களை விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா சேர்ந்து வரவேற்றார்களாம். நீண்ட நேரம் பேசிக் கொண்டே நள்ளிரவில் விருந்து நடைபெற்றதாம்.
அப்போது மோகன்லால், அவரது மனைவி, ஜோ மல்லூரிக்கு மட்டும் இலை போடப்பட்டதாம். உள்ளே இருந்து விஜய் அவரே பிரியாணியை எடுத்து வந்து பரிமாறினாராம். அதை பார்த்ததும் மோகன்லால் விஜயிடம் எங்களுடன் நீங்களும் சேர்ந்து சாப்பிடலாமே ? என்று சொன்னாராம். அதற்கு விஜய் ஒன்றுமே சொல்லாமல் சிரித்துக் கொண்டே பரிமாறினாராம்.
மேலும் மேலும் மோகன்லால் விஜயை பார்த்து சொல்ல விஜய் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிடவே இல்லையாம். இதை பார்த்த ஜோ மல்லூரிக்கு விஜய் மீது சிறிய வருத்தம் இருந்ததாம். எவ்ளோ பெரிய நடிகர்? அவர் அத்தனை முறை சொல்லியும் விஜய் கேட்கவே இல்லையே என்று சிறியதாக வருத்தப்பட்டாராம். மறு நாள் படப்பிடிப்பிற்கு வந்த விஜயை பார்த்ததும் ஜோ மல்லூரி முகத்தை திருப்பி கொண்டாராம்.
அது ஏன் என்று விஜய்க்கு தெரிந்து விட்டதாம். அதன் பிறகு ஜோ மல்லூரியிடம் கேட்க ஜோ மல்லூரி அவருடைய கோபத்திற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார்.அதற்கு விஜய் ‘ நான் என்ன பண்றது? என் அப்பா ஏற்படுத்தி விட்ட பழக்கம், யாராவது வீட்டிற்கு சாப்பிட வந்தால் அவர்களை சாப்பிட வைத்து விட்டுதான் சாப்பிடவேண்டும் என சொல்லியிருக்கிறார்’ என்று விஜய் சொன்னாராம்.