More
Categories: Cinema News latest news

மறக்க முடியுமா?.. விஜய் நடிக்க மறுத்த சில்வர் ஜூப்ளி படங்கள்.. இப்படியெல்லாமா காரணம் சொல்லுவாரு?..

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், ரஜினிக்கு பிறகு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இப்போது இணையம் முழுவதும் படு டிரெண்டாகி வருகிறார். அவரின் தளபதி – 67 படத்தின் அப்டேட்கள் இணையத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

vijay simran

ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக கமெர்சியல் மன்னனாக வலம் வரும் விஜய் இந்த அளவுக்கு ஒரு அந்தஸ்தை இடம் பிடித்திருக்கிறார் என்றால் அவருடைய ஒவ்வொரு காலகட்டத்தில் அடைந்த வளர்ச்சியும் அவரது தந்தையும் ஒரு காரணமாக இருக்கும். குழந்தை நட்சத்திரமாக மூன்று படங்களில் நடித்து அதன் பின் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சி தான்.

Advertising
Advertising

அதுமட்டுமில்லாமல் ரசிகன், தேவா போன்ற படங்களையும் இயக்கி விஜயை ஒரு ஹீரோவாக அழகு பார்த்தவரும் அவர் தான். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப விஜயின் பரிமாணங்களில் அவரின் தந்தைக்கு முக்கிய பங்குண்டு. ஆக்‌ஷன் ஹீரோவாக ஆக்கிய பெருமையிலும் ஃபேமிலி ஆடியன்ஸ் விஜயை தேடி வந்ததற்கு எஸ்.ஏ.சி தான் முக்கிய காரணம்.

vijay rambha devayani

இந்த வகையில் ஃபேமிலி ஆடியன்ஸை முழு மூச்சாக விஜயை ரசிக்க வைத்ததில் விஜய் நடித்த பிரியமானவளே மற்றும் நினைத்தேன் வந்தாய் போன்ற படங்கள் முக்கிய காரணமாகும். இந்த இரு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதில் விஜயை முற்றிலும் வித்தியாசமாக காணமுடிந்தது.

இதையும் படிங்க : ஏகே – 62 டேக் ஆஃப் ஆக கடைசி சான்ஸ்!.. மகிழ்திருமேனிக்கு கெடு விதித்த லைக்கா நிறுவனம்!..

இந்த இரு படங்களும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு எடுத்தப் படங்களாகும். அதன் தமிழ் உரிமையை எஸ்.ஏ.சி தான் வாங்கி வைத்தாராம். நினைத்தேன் வந்தாய் படத்தை தெலுங்கில் எடுத்த தெலுங்கு இயக்குனர் தானாக முன்வந்து தமிழிலும் நானே எடுக்கிறேன் என்று சொன்னாராம்.

vijay3

ஆனால் விஜய் கதையை கேட்டு நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். காரணம் நினைத்தேன் வந்தாய் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் அமைந்த படமாக இருந்ததாம். அதாவது கதை முழுவதும் தேவயாணி மற்றும் ரம்பா ஆகியோரை மட்டும் சுற்றி வரும் கதையாக இருந்ததனால் மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

அதே போல் பிரியமானவளே படமும் பெண்களை மையப்படுத்தி அமைந்த கதையாக இருந்ததனால் முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏனெனில் பிரியமானவளே படத்தில் சிம்ரனுக்கு கொஞ்சம் வெயிட்டான ரோல். மேலும் விஜயை சரமாரியாக திட்டுவது போன்றும் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதனாலேயே முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

vijay sac

அதன் பின் அவரது அப்பா தான் விஜயிடம் அப்படி நினைக்காதே, படம் ரிலீஸ் ஆகி இது விஜய் படம் என்று தான் மக்கள் சொல்வார்கள், கண்டிப்பாக அது நடக்கும் என்று சமாதானம் சொல்லி நடிக்க வைத்தாராம். அதன் பின் படம் எந்த அளவுக்கு ஒரு வெற்றியை பதிவு செய்தது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்த தகவலை எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் அவரே கூறினார்.

இதையும் படிங்க : விஜய் கதை கேட்கும் ஸ்டைலே வேற!.. எஸ்.ஏ.சி சொன்ன மாஸ் தகவல்..

Published by
Rohini

Recent Posts