சொந்த செலவில் சூனியம் வைக்கிறது இதுதானா? ஆபத்துனு தெரியாமலேயே உணர்ச்சிவசப்பட்ட விஜய்
தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். முன்பெல்லாம் விஜய்யின் புதிய படங்கள் தயாரிப்பு பணியில் இருக்கும் போதோ அல்லது திரைக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கும் போதோ அந்தப் படங்களின் அப்டேட்டுகள் பற்றிய செய்திகள் தான் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும். ஆனால் சமீப காலமாக விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் தான் இணையத்தையும் ஊடகத்தையும் ஆட்கொண்டிருக்கின்றன.
முற்றிலும் சுயநலம்
அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு நடந்த விஜயின் கல்வி விருது விழா அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் பல சர்ச்சைகளும் எழுந்து இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் திரை விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி விஜய் செய்தது பொது நலனுக்காக அல்ல அவருடைய சுயநலனுக்காக மட்டுமே என்று ஒரு திடீர் பேட்டி ஒன்று கொடுத்திருக்கின்றார்.
அதாவது விஜய் மேடையில் பேசும்போது இந்த எண்ணம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது என்று கூறினார். ஆனால் அதை கடந்த ஆண்டுகளில் செய்யாமல் இந்த வருடம் மட்டும் விஜய் செய்ததற்கு பின்னணியில் இருக்கும் காரணம் இது அரசியலுக்கான ஒரு படி என்று பிஸ்மி கூறினார். மேலும் விஜய் இப்பொழுது 200 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஆனால் இதற்கு முந்தைய வருடங்களில் 100,125 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். அவர் நினைத்திருந்தால் இந்த கல்வி விருது விழா மாதிரி கடந்த ஆண்டுகளில் செய்திருக்க முடியும். ஏன் செய்யவில்லை? இதிலிருந்து தெரிகிறது அவர் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே இந்த செயலை செய்திருக்கிறார் என்று என பிஸ்மி கூறினார்.
பப்ளிசிட்டிக்காக மட்டும்தானா?
மேலும் விஜய் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை கொடுத்தார் என்றும் பல மணி நேரம் நின்று கொண்டே விருதினையும் பரிசுகளையும் கொடுத்தார் என்றும் எழுதிய ஊடகங்கள் அவர் எவ்வளவு தொகை கொடுத்தார் என்பதை தெரிவிக்க மறந்து விட்டனர் என்றும் பிஸ்மி கூறினார். விஜய் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5000 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக கொடுத்தாராம் கிட்டத்தட்ட 1400 மாணவர்கள் எனில் மொத்தமாக 70 லட்சம் ரூபாய் விஜயின் மூலம் அந்த மாணவர்களுக்கு சென்றடைந்திருக்கின்றது ஆனால் இதன் மூலம் கிடைத்த பப்ளிசிட்டி கிட்டத்தட்ட 10 கோடி பெறுமானம் உள்ள பப்ளிசிட்டி விஜய்க்கு கிடைத்திருக்கிறதாம்.
மேலும் விஜயின் உள் நோக்கம் வேறு மாதிரியாக இருந்தாலும் மாணவர்களிடம் அவர் பேசிய பேச்சு வரவேற்கத்தக்கவையாகவே இருந்தன .அதாவது பெரியாரை படியுங்கள், அம்பேத்கரை படியுங்கள் என கூறுவதன் மூலம் அந்த தலைவர்களின் கருத்துக்கள் மாணவர்களிடம் சிறிதளவாவது போய் சென்றடையும் என்பதில் மிக்க மகிழ்ச்சி என்றும் பிஸ்மி கூறினார்.
சூனியம் வைத்துக் கொண்ட விஜய்
அதே நேரம் இந்த கருத்துக்கள் மூலம் தனக்கு ஆபத்து வரும் என்று விஜய் கொஞ்சம் கூட யோசித்து இருக்க மாட்டார். ஏனெனில் எவன் ஒருவன் அம்பேத்கரையும் பெரியாரையும் காமராஜரையும் படிக்கிறானோ அவன் எந்த ஒரு நடிகனுக்கும் விசில் அடிக்கும் ரசிகனாக இருக்க மாட்டான் என்றும் எந்த நடிகரையும் அரசியல் தலைவனாக ஏற்க மாட்டான் என்றும் எந்த நடிகரையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்க மாட்டான் என்றும் பிஸ்மி கூறினார். இவர்களை பற்றி படிக்கும் போது இந்த ஆபத்துக்கள் எல்லாம் அந்த புத்தகத்தில் இருக்கின்றது என்பதை தெரியாமலேயே ஒரு உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறில் விஜய் சொல்லி இருக்கிறார் என பிஸ்மி கூறினார்.
இதையும் படிங்க : எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதுதான் தெரியும்!.. பாராட்டியது தெரியுமா?.. அதுவும் செமயா?…