விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்ல! சாய்பாபா கோயில் இவர் கட்டியதே இல்லையாம்.. அப்புறம் எதுக்கு இந்த வேஷம்

by Rohini |
vijay
X

vijay

Actor Vijay: அரசியலுக்காக வேஷம் போடுகிற பல அரசியல்வாதிகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது செய்கிறேன். இது செய்கிறேன் என எதையும் செய்யாமல் வெளி வேஷம் போட்டுக் கொண்டு இருக்கும் எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வரிசையில் இப்போது விஜயும் சேர்ந்துவிட்டார் என்று சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

விஷயம் என்னவெனில் சில தினங்களுக்கு முன்பு விஜய் சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்வது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. விசாரித்ததில் அது விஜய் கட்டிய சாய்பாபா கோயில் என்றும் அவருடைய தாய் ஷோபாவுக்காக கட்டியது என்றும் தெரியவந்தது. ஆனால் உண்மையிலேயே அந்த சாய்பாபா கோயிலை விஜய் கட்டவே இல்லை என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயாவை லாக் செய்த மீனா… மனோஜை ஏத்திவிட்ட ரோகிணி… சிறகடிக்க ஆசையில் கலவரம்!

அதாவது விஜய் ஒரு உண்மையான கிறிஸ்தவ மதத்தை பின்பற்றக் கூடியவர். அவர் எப்படி சாய்பாபா கோயிலை கட்டமுடியும்? அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூட எல்லா கோயிலுக்கும் செல்லக் கூடியவர்தான். இருந்தாலும் எந்த இந்து மதக் கடவுளை பார்த்தாலும் அவர் வாயில் இருந்து முதலில் ‘ஏசப்பா காப்பாற்று’ என்றுதான் வருமாம். இதை எஸ்.ஏ.சந்திரசேகர் வலைப்பேச்சு பிஸ்மியிடமே கூறியிருக்கிறாராம்.

இப்படி இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் தான் விஜய். அதனால் அவர் கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. அதையும் மீறி விஜய் ஒன்னும் லாரன்ஸ் இல்லை இந்த கோயிலை கட்டுவதற்கு. லாரன்ஸ் அளவுக்கு அவர் தாய் மீது விஜய் அன்பு வைக்கவில்லை என்று இப்படி சொன்னாரா என தெரியவில்லை.

மேலும் கொரட்டூர் ஒன்னும் அமெரிக்காவிலோ ஆப்பிரிக்காவிலோ இல்லை. இங்கு சென்னையில்தான் இருக்கிறது. இத்தனை வருடமாக விஜய் இந்த கோயிலை கட்டுகிறார் என்றால் நமக்கு தெரியாமல் இருக்குமா?

இதையும் படிங்க: KPY பாலாவின் திருமணத்திற்கு வந்த திடீர் சிக்கல்!.. அட இவருக்கா இப்படி நடக்கணும்!..

யாருக்குமே தெரியவில்லையே. மேலும் கொரட்டூர் பகுதி மக்கள் விஜய்தான் கட்டுகிறார் என்று சொன்னாலும் அது ஒரு வேளை சொல்லவைக்கப்பட்டவையாக கூட இருக்கலாம் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறினார். ஆனால் நேற்று அந்த சாய்பாபா கோயிலுக்கு வந்த ஷோபா இது எனக்காக என் மகன் விஜய் கட்டியது என மிகவும் ஆணித்தரமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story