Connect with us

விஜய் என்ன குறை வச்சார்.?! ‘பீஸ்ட்’ நெல்சனை கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்.!

Cinema News

விஜய் என்ன குறை வச்சார்.?! ‘பீஸ்ட்’ நெல்சனை கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்.!

தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் ரிலீஸானது திரைப்படம் பீஸ்ட் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கிய இதுதிரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு துள்ளலான இசையை கொடுத்திருந்தார். ஏப்ரல் 13ஆம் தேதி படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்தனர். படத்தின் டிரைலர் வெளியான போது அது முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்ததால் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், வெளியான பிறகு படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற ரிசல்ட்டே வெளியானது. படத்தில் விஜய் படத்திற்கு ஏற்றவாறு ஆக்சன் காட்சிகள் குறைவு. மேலும், டாக்டர் பட நிகழ்ச்சி அளவுக்கு காமெடி காட்சிகளும் பெரிதாக இல்லை. என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இது குறித்து அண்மையில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கே.ராஜன் கூறுகையில், விஜய் இந்த படத்தில் என்ன குறை வைத்தார்? நன்றாக ஆடி உள்ளார். நன்றாக பாடியுள்ளார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய படத்தைவிட இதில் குறைவாக நடித்தாரா? இல்லை, முந்தைய படத்தில் எப்படி நடித்தாரோ அதை விட அதிகமாகவே நடித்துள்ளார். அப்படி இருந்தும் படம் ஓடவில்லை என்றால் அது யாருடைய தவறு? நிச்சயம் அது இயக்குனர் நெல்சனின் மீதான தவறுதான். இதில் விஜய்க்கு எந்த விதமான தவறும் கிடையாது. என்று தனது கருத்தை முன்வைத்தார்.

இதையும் படியுங்களேன் – தளபதி விஜயை அசிங்கப்படுத்திய சன் பிக்ச்சர்ஸ்.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.!

உண்மையில், அதுதான் நிஜமும் கூட. ஒன்று இது முழுக்க முழுக்க நெல்சனின் திரைப்படமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் டாக்டர் திரைப்படம் போல ஒரு நல்ல காமெடி திரைப்படம் விஜய் நடிப்பில் இருந்து நமக்கு கிடைத்திருக்கும். இல்லையென்றால் விஜய் மாஸுக்கு ஏற்றவாறு ஒரு நல்ல ஆக்ஷன் படத்தை இயக்கி இருக்க வேண்டும். அப்படியும் இல்லை. எனவே, இந்த திரைப்படம் தற்போது தடுமாறி உள்ளது எனக் கூறப்படுகிறது.

இருந்தாலும் கோலமாவு கோகிலா, நெல்சன் டாக்டர் போன்ற தரமான காமெடி திரைப்படங்களை இயக்கிய நெல்சனின் மீது ரசிகர்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். நிச்சயம் தான் யார் என்பதை அடுத்த படத்தில் மீண்டும்  நிரூபிப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top