எஸ்.ஏ.சி மட்டும் இல்லைனா விளக்குதான் புடிச்சிருப்பாரு விஜய்! என்ன யோக்கியம் இருக்கு? கோபத்தை கக்கிய பிரபலம்

Actor Vijay: தற்போது அரசியலில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் விஜய். சினிமாவில் இவ்வளவு புகழ் பேரு செல்வாக்கு என எல்லாம் இருந்தும் அதை எல்லாம் உதறி தள்ளிவிட்டு மக்களுக்காக நல்லது செய்யப் போகிறேன் என அரசியலில் குதிக்கிறார் விஜய். அவர் திடீரென அரசியலுக்கு வருவதற்கான காரணம் முன்பு அவருடைய படங்கள் அரசால் பல பிரச்சினைகளுக்கு உட்பட்டு படத்தையே ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தனர்.

அந்த நேரத்தில் விஜய் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஒரு கோபம்தான் அவர் அரசியலுக்கு வருவதாகவும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். அதுவும் விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்? யாருக்கு எதிராக நிற்க போகிறார் என இதுவரை தெரியவில்லை. ஆனால் அவருடைய நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட கட்சியினருடன் நட்பாகவும் ஒரு சில கட்சிகளுக்கு எதிராகவும் அவர் செயல்படுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் பாய் விஜய்யை பற்றி அவருடைய காரசாரமான விவாதத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது ரசிகர்களை பொறுத்த வரைக்கும் விஜய்யை விட அஜித் ரசிகர்கள் தான் பல மடங்கு இருக்கிறார்கள். சோசியல் மீடியாவில் அவர்களின் பலம் என்ன என தெரிகிறது ,விஜய்க்கு 100 பேர் இருக்கிறார்கள் என்றால் அஜித்துக்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பாகுபலி, ஆர்ஆர்ஆர், ஜவான் வரிசையில் சாதனை படைத்த கல்கி! இவ்ளோ கோடி போட்டு எடுத்து இது இல்லைனா எப்படி?

விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களிலேயே சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அஜித் ரசிகர்களையே விஜயால் ஒன்றும் பண்ண முடியவில்லை. இவர் தமிழ்நாட்டில் அரசியலில் இறங்கி மக்கள் மத்தியில் மகுடம் சூட்டுவார் என எதிர்பார்க்க முடியுமா? அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த கல்வி உதவி வழங்கும் விழாவில் அவர் என்ன பேசினார்?

.நீட் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை நீட் மட்டுமல்ல அவருக்கு ஒன்றுமே தெரியாது .அவர் பாட்டுக்கு போதையில் கிடப்பார். யாரோ எழுதித் தரும் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்துக் கொண்டு மேடையில் பேசுகிறார். அதேபோல் ரஜினியுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ரஜினிக்கு இருக்கும் மாஸ் வேறு. இவருக்கு இருக்கும் மாஸ் வேறு.

இதையும் படிங்க: நான் எப்படிப்பட்டவன்? சிக்குவேனா? வடிவேலுவுக்கும் பயில்வான் ரெங்கநாதனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா?

மேலும் சாருக்கான் சல்மான் கான் அவர்களுக்கு 70 வயது ஆனாலும் இன்னும் சினிமாவில் அவர்களால் ஜொலிக்க முடிகிறது. ஆனால் விஜயை பொருத்தவரைக்கும் டிங்கரிங், பட்டியெல்லாம் செய்து ஓரளவுக்கு சினிமாவில் தாக்குப்பிடித்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு அதுவும் அவரால் பண்ண முடியாது. அதனால் அரசியலுக்கு வந்திருக்கிறார்.

மேலும் இவ்வளவு யோக்கியமாக பேசும் விஜய் தமிழ்நாட்டில் தலைவரே இல்லை எனக் கூறியிருக்கிறார். அவர் வந்து என்ன பண்ணப் போகிறார்? ஒரு படத்தை பார்க்க திரையரங்குக்கு போனால் ஒரு டிக்கெட் 100 ரூபாய். ஆனால் அதை 2000 வரை விற்கிறார்கள். அதை அவரால் தடுத்து நிறுத்த முடியுதா? அவருக்கு வரும் 150 கோடி 200 கோடி பெட்டியை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று விடுகிறார்.

இதையும் படிங்க: கமலுக்கும் இருக்கும் பெருந்தன்மை ரஜினிக்கு இல்லை!.. இந்த விஷயத்துல கிரேட் உலக நாயகன்தான்!..

அதுமட்டுமல்லாமல் அவருடைய அப்பா எஸ் ஏ சி மட்டும் இல்லையென்றால் இந்நேரம் விஜய் ஒரு டெக்னீசியனாக கேமராவை பிடித்துக்கொண்டோ லைட்டை பிடித்துக் கொண்டோதான் நின்று இருப்பார். அதுவும் இல்லை என்றால் வேறு ஏதாவது தொழிலுக்கு தான் சென்றிருப்பார். அவர் சுத்த வேஸ்ட் .ஒன்றுமே அவருக்கு தெரியாது என காரசாரமாக பேசியிருக்கிறார் ரஹீம் பாய்.

 

Related Articles

Next Story