Categories: latest news

மாதவனை கண்டு பின்வாங்குகிறாரா விஜய்.! இது என்ன புது டிவிஸ்டா இருக்கு.?!

விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் பீஸ்ட் இந்த திரைப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விஜய்க்கு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மிகவும் ராசியான நாள் அந்தத் தேதியில் ரிலீஸான விஜய்யின் அனேகமான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளன.

அதனால், விஜயும் அந்த தேதியில் ரிலீஸ் செய்ய உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே தேதியில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாக உள்ளது, மேலும் அதே தேதியில் மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்கெட்ரி’ திரைப்படம் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாம்.

இந்த இரண்டு படங்களும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என ஒரு PAN இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதால் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு விநியோகஸ்தர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதையும் படியுங்களேன்- விஷாலின் நாயை கண்டு பயந்து நடுங்கும் தியேட்டர் அதிபர்கள்.!

இதனை கருத்தில் கொண்டு விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரைக்கு வரும் என தற்போது கோலிவுட்டில் கூறப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan