விஜயிடம் தோற்றுப் போன ரஜினி.. பேன் இந்திய ஸ்டார்கள் இருந்தும் காலியான ‘கூலி’

by Rohini |   ( Updated:2025-03-20 01:34:03  )
rajinivijay
X

rajinivijay

ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இந்தப் படத்தில் சுருதிஹாசன், சத்யராஜ், உப்பேந்திரா, சௌபின் சாஹிர் , நாகர்ஜூனா என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ரஜினிக்கு171வது திரைப்படம். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக சமீபத்தில்தான் படக்குழு அறிவித்தது. அது சம்பந்தமான புகைப்படங்களையும் பதிவிட்டு அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. பெரிய மல்டி ஸ்டார்கள் இந்தப் படத்தில் இருப்பதால் பெரிய அளவில் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பெரிய அளவில் படத்தை கொண்டு போக வேண்டும் என ஒட்டுமொத்த படக்குழுவும் தீவிரமாக இறங்கியுள்ளது.

ரஜினி காம்பினேஷனில் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. ஜெயிலர் படம் பெரிய வெற்றி பெற தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரிய லாபத்தை படம் பெற்றுக் கொடுத்தது. அதிலிருந்தே ரஜினியை வைத்து அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஏற்கனவே கார்த்தி, சூர்யா, கமல், விஜய் இவர்கள் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் லோகேஷ்.

அதனால் ரஜினியின் கூலி படத்திலும் ஒரு பெரிய மாஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் லோகேஷின் பிறந்த நாளின் போது படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளியானது. படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க வெறும் புகைப்படங்களே வெளியானது. கூலி படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் வியாபாரம் பற்றிய தகவல் இப்போது சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றது. 2.0 படத்தை விட கூலி படம் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமையில் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுவும் ரஜினியின் முந்தைய படங்களை விட கூலி படம்தான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறதாம். 120 கோடிக்கு அதன் டிஜிட்டல் வியாபாரம் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஆனால் விஜயை முந்த முடியவில்லை என பிஸ்மி கூறினார். இதுவரை விஜயின் படங்கள் தான் அதிக விலைக்கு வியாபாரம் நடந்திருப்பதாக பிஸ்மி கூறினார். 125 கோடி வரை விஜயின் படங்கள் டிஜிட்டலில் வியாபாரம் போயிருப்பதாக பிஸ்மி கூறியிருக்கிறார்.

Next Story