விஜய் நடிப்பில் உருவாகி வந்த படங்கள் தான் ரிலீஸ் சிக்கலை சந்தித்து வந்த நிலையில் அவரின் பட ஆடியோ லான்ஞ்சுக்கே தற்போது பெரும் சிக்கல் உருவாகி இருக்கிறது. அங்கையா இங்கையா என பல தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் வட்டமடித்து வந்தது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. த்ரிஷா பல வருடங்களுக்கு பின்னர் விஜயின் நாயகியாகி இருக்கிறார்.
படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத் ஆகிய பிரபலங்கள் வில்லன்களாக நடிக்க இருக்கிறார்கள். விரைவில் இந்த படத்தின் சென்சாரை முடித்து யூ/ஏ சர்டிபிகேட்டை வாங்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக உழைத்து வருகின்றனர். இது கடைசி நேர பிரச்னையை தீர்க்கும் என்பதே லோகேஷின் முடிவாக இருக்கிறது.
இதையும் படிங்க- மீண்டும் மீண்டுமா!. ஆளை விடுங்கடா சாமி!.. வெற்றிமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் சேதுபதி!..
இது ஒரு புறமிருக்க, லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் நடத்த படக்குழு தீவிரம் காட்டி இருக்கிறது. அது பெரிய அளவில் படத்திற்கு விளம்பரமாக அமையும் என்ற ஆசையை தளபதியிடம் சொல்லி இருக்கின்றனர். ஆனால் இதற்கு தளபதி முடியவே முடியாது எனக் கூறிவிட்டாராம்.
மதுரை மக்கள் சாதாரண நிகழ்ச்சியயே திருவிழா போல கொண்டாடுவார்கள். லியோ ஆடியோ லான்ஞ்சினை அங்கு நடத்தினால் இது பல மாநிலங்களில் பேசும் பொருளாகி விடும். இதனால் தனது திரை வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் சிக்கல் ஏற்படும்.
அதும், ஆளும் அரசினை சீண்டி பார்க்க ரசிகர்கள் எதுவும் செய்துவிட்டால் அது லியோ படத்தின் வருமானத்தினை கூட பாதிக்கலாம் என்பதற்காகவே விஜய் கறார் காட்டி விட்டாராம். இதனால், எப்போதும் போல விஜயின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் செப்டம்பர் மாதத்தில் தான் நடக்கும் எனக் கூறப்படுகிறது. அது எதுவும் பொறியியல் கல்லூரி இல்லை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க- அஜித்தை போல சொகுசு கண்ட பூனையாக மாறிய சூர்யா!.. சுதா கொங்கரா, வெற்றிமாறன் நிலைமை அவ்ளோதான் போல!..
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…
ஏ ஆர்…