விஜயோட எல்லா குணாதிசயங்களும் இருக்கும் ஒரே நடிகர்...! தளபதியின் அப்பா யாரை சொல்லியிருக்காருனு தெரியுமா...?
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராகவும் தளபதியாகவும் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு இந்த வாரிசை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
நடிப்பு போக விஜய்க்கு என்று தனி குணாதிசயங்களும் உண்டு. ஆரம்பகால படங்களில் அந்த குணங்களை நாம் பார்க்க முடிந்தது. பேச்சு, நடை, இவற்றில் தனி ஸ்டைலுடன் நகைச்சுவையுடன் நக்கல் நையாண்டியுடன் வெளிப்படுத்துவார். சினிமாவில் தான் அப்படி என்றால் வீட்டிற்குள்ளேயும் சில பழக்கங்களை பின்பற்றி வந்திருக்கிறார்.
இந்த செய்தியை அவரின் அப்பாவும் இயக்குனருமான சந்திரசேகர் தெரிவித்தார். அதுவும் யாரிடம் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். வேறு யாருமில்லை. இளம் நடிகர் ஜெய்யிடம் தான் சொல்லியிருக்கிறார். அவரிடம் சொல்ல காரணம் ஏற்கெனவே ஜெய்யை வைத்து கேப்மாரி என்ற படத்தை இயக்கினார் சந்திரசேகர்.
அப்போது தான் ஜெய்யின் நடத்தைகளை கவனித்த சந்திரசேகர் நீ பண்றதெல்லாம் என் மகன் விஜய்யின் குணாதிசயங்களை ஞாபகபடுத்துகிறது. நீ வேண்டுமென்றே விஜய் மாதிரி பண்ணவில்லை. எதேச்சையாக தான் வருகிறது. சினிமா மட்டுமில்லை வீட்டினுள்ளும் விஜய் இப்படிதான் இருப்பார் என ஜெய்யிடம் sac கூறியுள்ளார்.