More
Categories: Cinema News latest news

தளபதி 67 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? – விஜய் ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தால் விஜய் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜுக்கும் ரசிகர்களாக மாறினர்.

மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய்க்கு 66வது திரைப்படமாகும். இப்படத்திற்கு பின் மீண்டும் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கை கோர்க்கவுள்ளாராம். இது விஜயின் 67வது திரைப்படமாகும். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் வேறு ஒரு படத்தை அவர் இயக்கவுள்ளார். அப்படத்திற்கு பின் அவர் விஜயை மீண்டும் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா